Vidiyarkaalathu Velliye

Music
Lyrics
MovieChristian
விடியற்காலத்து வெள்ளியே தோன்றி
கார் இருள் நீங்கத் துணைபுரிவாய்
உதய நக்ஷத்திரமே ஒளி காட்டி
பாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய்
தண் பனித் துளிகள் இலங்கும் போது
முன்னணையில் அவர் தூங்குகின்றார்
வேந்தர் சிருஷ்டிகர் நல் மீட்பர் என்று
தூதர்கள் வணங்கிப் பாடுகின்றார்
ஏதோமின் சுகந்தம் கடலின் முத்து
மலையின் மாணிக்கம் உச்சிதமோ?
நற்சோலையின் வெள்ளைப்போளம் எடுத்து
தங்கமுடன் படைத்தல் தகுமோ?
எத்தனை காணிக்கைதான் அளித்தாலும்
மீட்பர் கடாக்ஷம் பெறல் அரிதே
நெஞ்சின் துதியே நல் காணிக்கையாகும்
ஏழையின் ஜெபம் அவர்க்கருமை.
விடியற்காலத்து வெள்ளியே தோன்றி
கார் இருள் நீங்கத் துணைபுரிவாய்
உதய நக்ஷத்திரமே ஒளி காட்டி
பாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய்