vaanor-raajan - Christian Tamil Song Lyrics

Vaanor Raajan Thumbnail

Song Details

Songvaanor-raajan
Music
Lyrics
Release Date

Tamil Lyrics

வானோர் ராஜன்
பிறந்தார் பிறந்தார்
வானோர் ராஜன்
பிறந்தார் பிறந்தார்
பூவினை மீட்கப் பரலோகப்
பூமான் பூதலந்தனில் பிறந்தார்
பூட்டிய வீட்டுயர் வாசலைத்
திறக்கப் பூலோகத்தில் பிறந்தார்
பூவினை மீட்கப் பரலோகப்
பூமான் பூதலந்தனில் பிறந்தார்
பூட்டிய வீட்டுயர் வாசலைத்
திறக்கப் பூலோகத்தில் பிறந்தார்
வாசல்களே உயருங்கள்
கதவுகளே திறவுங்கள்
வாசல்களே உயருங்கள்
கதவுகளே திறவுங்கள்
வானாதி ராஜன் வல்லமை
தேவனை வாழ வழிவிடுங்கள்
வானாதி ராஜன் வல்லமை
தேவனை வாழ வழிவிடுங்கள்
ஆக்கினைத் தீர்ப்பை அடையாதவாறு
அடைக்கலந்தரப் பிறந்தார்
ஆருயிரீந்து அன்பினைக்
காட்ட ஆண்டவரே பிறந்தார்
ஆக்கினைத் தீர்ப்பை அடையாதவாறு
அடைக்கலந்தரப் பிறந்தார்
ஆருயிரீந்து அன்பினைக்
காட்ட ஆண்டவரே பிறந்தார்
ஆத்துமமே ஸ்தோத்தரி
அல்லேலுயா ஆர்ப்பரி
ஆத்துமமே ஸ்தோத்தரி
அல்லேலுயா ஆர்ப்பரி
ஆண்டவரான அருளுள்ள
வள்ளல் ஆள ஆசைப்படுங்கள்
ஆண்டவரான அருளுள்ள
வள்ளல் ஆள ஆசைப்படுங்கள்

Share this song