Vaanam Vaalthattum

Music
Lyrics
MovieChristian
வானம் வாழ்த்தட்டும்
வையம் போற்றட்டும்
பூமி மகிழட்டும்
பூதலம் பணியட்டும்
பாடுங்கள் பாடுங்கள்
பாலன் இயேசு இன்று பிறந்தார்
பாலன் இயேசு இன்று பிறந்தார்
Merry Merry Merry Merry
Christmas Christmas Christmas Christmas
காலம் சிந்தும் கானம் தாலாட்டு பாடிடுதே
மேகம் சிந்தது வானம் தேனாக மாறிடுதே
குளிரும் பணியும் வாட்டிட
குளிரில் கோமகன் தூங்கிட
விண்மீன்கள் கூட்டமே ஒளிருங்கள்
விண் பாலனோடு விளையாடவே
வா வா வா வானத்து வெண்ணிலவே
ஏதேன் தந்த பாவம் சாபங்கள் நீங்கிடவே
ஏழை கோலம் கொண்டார் இயேசு பாலனின்றே
அன்னை மரியின் மடியிலே
அன்பின் ரூபம் ஆனாரே
இனி மீட்க வந்த தேவ மைந்தனே
இனி பாடவைத்த இயேசு பாலனே
வா வா வா வாழ்த்து பாடுகிறேன்