Ummale Than

Music
Lyrics
MovieChristian
உம்மாலே தான், என் இயேசுவே,
ரட்சிக்கப்படுவேன்;
உம்மாலேதான் பேரின்பத்தை
அடைந்து பூரிப்பேன்.
இப்பந்தியில் நீர் ஈவது
பரம அமிர்தம்;
இனி நான் பெற்றுக்கொள்வது
அநந்த பாக்கியம்.
இவ்வேழை அடியேனுக்கு
சந்தோஷத்தைத் தந்தீர்;
இக்கட்டு வரும்பொழுது,
நீர் என்னைத் தேற்றுவீர்.
பூமியில் தங்கும் அளவும்
உம்மையே பற்றுவேன்;
எவ்வேளையும் எவ்விடமும்
நான் உம்மைப் போற்றுவேன்.