Um Rajjiyam

Music
Lyrics
MovieChristian
உம் ராஜ்ஜியம் வருங்காலை கர்த்தரே
அடியேனை நினையும் என்பதாய்
சாகும் கள்ளன் விஸ்வாச நோக்காலே
விண் மாட்சி கண்டு சொன்னான் தெளிவாய்.
அவர் ஓர் ராஜா என்று சொல்லுவார்
எவ்வடையாளமும் கண்டிலாரே.
நம் பெலனற்ற கையை நீட்டினார்.
முட் கிரீடம் நெற்றி சூழ்ந்து பீறிற்றே.
ஆனாலும் மாளும் மீட்பர் மா அன்பாய்
அருளும் வாக்கு, “இன்று என்னுடன்
மெய்யாய் நீ பரதீஸிலிருப்பாய்”
என்பதுவாம் விஸ்வாசத்தின் பலன்.