ullam-uruguthaiyaa - murugan Tamil Song Lyrics

Ullam Uruguthaiyaa Thumbnail

Song Details

Songullam-uruguthaiyaa
Moviemurugan
Music
Lyrics
Release Date

Tamil Lyrics

உள்ளம் உருகுதய்யா
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைதிடவே
அள்ளி அணைதிடவே
அள்ளி அணைதிடவே, எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா
உள்ளம் உருகுதய்யா……
பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா
பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா
பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேரி
ஆடும் மயிலேரி
ஆடும் மயிலேரி முருகா, ஓடி வருவாயப்பா….
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா….
உள்ளம் உருகுதய்யா
பாசம் அகன்றதய்யா, பந்த பாசம் அகன்றதய்யா உந்தன்மேல் நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே
ஈசன் திருமகனே
ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததப்பா….
உள்ளம் உருகுதய்யா
ஆறு திருமுகமும்… ஆறு திருமுகமும் அருளை வாரி வழங்குதய்யா
ஆறு திருமுகமும்…. (உன்) அருளை வாரி வழங்குதய்யா
வீரமிகு தோளும், வீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா….
உள்ளம் உருகுதய்யா….
கண்கண்ட தெய்வமய்யா… கண்கண்ட தெய்வமய்யா
நீயிந்தக் கலியுக வரதனய்யா…
கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா…
பாவியென்றிகழாமல்… பாவியென்றிகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா….
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா….
உள்ளம் உருகுதய்யா
உள்ளம் உருகுதய்யா……
உள்ளம் உருகுதய்யா பாடல் காணொளி…

Share this song