Thooyathi Thooyavare

Music
Lyrics
MovieChristian
தூயாதி தூயவரே உமது
புகழை, நான் பாடுவேன்
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின்
புகழ் பாட வேண்டும்
தூயாதி தூயவரே உமது
புகழை, நான் பாடுவேன்
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின்
புகழ் பாட வேண்டும்
சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே!
பாரோரின் நோய்களை நீக்கினவர்
பாவி என் பாவ நோய் நீக்கினீரே!
துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே!
பரலோகில் இடமுண்டு என்றவரே
பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே