thollai-kastangal - Christian Tamil Song Lyrics

Thollai Kastangal Thumbnail

Song Details

Songthollai-kastangal
Music
Lyrics
Release Date

Tamil Lyrics

தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்
துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்
இருளாய்த் தோன்றும்எங்கும்
சோதனை வரும் வேளையில்
சொற்கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும்பரன்
உன்னைக்காக்க வல்லோர்
காக்கும்வல்ல மீட்பர் உண்டெனக்கு
காத்திடுவார் என்றுமே
ஐயம் மிருந்ததோர் காலத்தில்
ஆவி குறைவால்தான்
மீட்பர் உதிர பெலத்தால்
சத்துருவை வென்றேன்
என் பயம் யாவும் நீங்கிற்றே
இயேசு கை தூக்கினார்
முற்றும் என்னுள்ளம் மாறிற்று
இயேசென்னைக் காக்கவல்லோர்
என்ன வந்தாலும் நம்புவேன்
என் நேச மீட்பரை
யார் கைவிட்டாலும் பின்
செல்வேன் எனது இயேசுவை
அகல ஆழ உயரமாய்
எவ்வளவன்பு கூர்ந்தார்
என்ன துன்பங்கள் வந்தாலும்
என்னைக் கைவிடமாட்டார்

Share this song