Thevai Nirainthavar Yesu

Music
Lyrics
MovieChristian
தேவை நிறைந்தவர் இயேசு
தேவா வல்லமைதந்திடுமே
தேவைகள் சந்திக்க ஏற்றதோர் வல்லமை
வேளையில் தந்திடுமே .. இந்த
தேவைமிக்க ஒரு நாட்டினைத்
தந்தீர் வல்லமைதந்திடுமே
எத்தனை மதங்கள்
எத்தனை தெய்வங்கள்
கர்த்தரே தெய்வம் என்றே
காட்ட வல்லமை தந்திடுமே
நாடுகள் நடுவினில் அமைதியே
இல்லை வல்லமைதந்திடுமே
திறப்பின் வாசலில் நின்று
களைப்பின்றி புலம்பிட
எங்களை எழுப்பிடுமே
தேவா வல்லமை தந்திடுமே
நித்திய நாட்டுக்கு மக்களைச்
சேர்க்க வல்லமைதந்திடுமே
நிலையில்லா உலகினில்
நிலைநிற்கும் சேமிப்பு
ஆத்துமாக்கள் மட்டுமே
தேவா வல்லமை தந்திடுமே