Theeratha Thaagaththal

Music
Lyrics
MovieChristian
தீராத தாகத்தால் என் உள்ளம் தொய்ந்ததே,
ஆ, ஜீவ தண்ணீரால் தேற்றும் நல் மீட்பரே,
விடாய்த்த பூமியில் என் பசி ஆற்றுமே,
நீர் போஷிக்காவிடில், திக்கற்றுச் சாவேனே.
தெய்வீக போஜனம், மெய் மன்னா தேவரீர்,
மண்ணோரின் அமிர்தம் என் ஜீவ ஊற்று நீர்.
உம் தூய ரத்தத்தால் என் பாவம் போக்கினீர்,
உம் திரு மாம்சத்தால் ஆன்மாவைப் போஷிப்பீர்.
மா திவ்விய ஐக்கியத்தை இதால் உண்டாக்குவீர்,
மேலான பாக்கியத்தை ஏராளமாக்குவீர்.
இவ்வருள் பந்தியில் பிரசன்னமாகுமே,
என் ஏழை நெஞ்சத்தில் எப்போதும் தங்குமே.