thathvamasi-gayathri-mantra - ayyapan Tamil Song Lyrics

Thathvamasi Gayathri Mantra Thumbnail

Song Details

Songthathvamasi-gayathri-mantra
Movieayyapan
Music
Lyrics
Release Date

Tamil Lyrics

தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் காயத்ரி மந்திரம்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐயப்பன் காயத்ரியை தினமும் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும்.
ஓம் பூதநாதய வித்மஹே
மஹாசாஸ்தாய தீமஹி
தந்நோ ஐயப்ப ப்ரசோதயாத்…
தத்வமஸி என்பதன் பொருள்
சாமி சரணம் ஐயப்பா சரணம்
ஐயப்பன் கோவில் நுழைவுவாசலில் தத்வமஸி என எழுதப்பட்டிருக்கும்~
இதற்கு நீயே அதுவாக இருக்கிறாய் என பொருள்
அது என்பது ஐயப்பனைக் குறிக்கும்.
நீ உருவத்தால் மனிதனாய் இருக்கிறாய்.
உன் உடலைக் கொண்டு பல பாவங்கள் செய்கிறாய்.~
என்னை நினைத்து விரதம் இருக்கும் போது மட்டும் உன் உடலையும், மனதையும் கட்டுக்குள் வைத்திருக்கிறாய்._
உன்னை எல்லாரும் சுவாமி என்கிறார்கள்.
ஏன்…ஐயப்பா என்று என் பெயரையே உனக்கு சூட்டி அழைக்கிறார்கள்._
அப்போது நீ நானாகவே ஆகிறாய். தெய்வநிலைக்கு உயர்த்தப்படுகிறாய்.
இங்கிருந்து நீ திரும்பிய பிறகும், இந்த விரதங்களை மனதால் கடைபிடி.
நானாகவே நீ மாறி விடுவாய் என்று ஐயப்பன் தன் பக்தர்களுக்கு சொல்வது போல அமைந்துள்ளது இந்த வாக்கியம்.

Share this song