Sri Rajeshwari Amman

Music
Lyrics
Movielalithambigai
ஸ்ரீ சக்கரம் தன்னில் அமர்ந்த ராஜேஸ்வரி
சின்மயமானந்த சிவ மனோகரி
சிந்தாமணி மண்டபத்தில் கொலு இருந்தாள்
எங்கள்சிந்தையிலே வந்து கலந்து இருந்தாள்
அலைமகள் கலைமகள் கீதம் பாட
நந்திகேஸ்வரரும் தாளம் போட அரம்பை ஊர்வசியும் நர்த்தனமாட அந்தணர் நான் மறை வேதங்கள் ஓத தேவி ராஜ ராஜேஸ்வரி கொலு இருந்தாள்
ஸ்ரீ சக்கரம் தன்னில் அமர்ந்த ராஜேஸ்வரி
சின்மயமானந்த சிவ மனோகரி
சிந்தாமணி மண்டபத்தில் கொலு இருந்தாள்
எங்கள்சிந்தையிலே வந்து கலந்து இருந்தாள்
சிம்ம வாகனத்தில் வீற்றிருக்க செங்கரத்தில் கரும்பும் வில்லும் தாங்கி இருக்க
ரத்ன மாலைகளும் பளபளக்கநவரத்ன சிம்மாசனத்தில் கொலு இருந்தாள்
ஸ்ரீ சக்கரம் தன்னில் அமர்ந்த ராஜேஸ்வரி
சின்மயமானந்த சிவ மனோகரி
சிந்தாமணி மண்டபத்தில் கொலு இருந்தாள்
எங்கள்சிந்தையிலே வந்து கலந்து இருந்தாள்
திருமால் சிவனும் நான் முகனும் ஆறுமுகனுடன் கணபதியும் தும்புறு நாரதர் ‘ உடன் கூட’ முப்பத்து முக்கோடி தேவர் வணங்க தேவி ராஜ ராஜேஸ்வரி கொலுவிருந்தாள்
ஸ்ரீ சக்கரம் தன்னில் அமர்ந்த ராஜேஸ்வரி
சின்மயமானந்த சிவ மனோகரி
சிந்தாமணி மண்டபத்தில் கொலு இருந்தாள்
எங்கள்சிந்தையிலே வந்து கலந்து இருந்தாள்