runa-hara-ganesha-stotram - ganapathy Tamil Song Lyrics

Runa Hara Ganesha Stotram Thumbnail

Song Details

Songruna-hara-ganesha-stotram
Music
Lyrics
Release Date

Tamil Lyrics

கணேச ருணஹர ஸ்தோத்ரம்
ஸிந்தூர வர்ணம் த்விபுஜம் கணேசம் லம்போதரம் பத்மதளே நிவிஷ்டம் ப்ரஹ்மாதிதேவை பரிஸேவ்யமானம் ஸித்தைர்யுதம் தம் ப்ரணமாமி தேவம்.
ஸிந்தூர நிறத்தில் இரண்டு கைகளுடனும், சரிந்த வயிற்றுடனும், ப்ரம்மா, முதலிய தேவர்களாலும் ஸித்தர்களாலும் சூழப்பட்டு தாமரை இதழ்களில் அமர்ந்துள்ள கணேச தேவரை நமஸ்கரிக்கின்றேன்.
ஸ்ருஷ்ட்யாதெள ப்ரஹ்மணா ஸம்யக் பூஜித பல ஸித்தயே
ஸதைவ பார்வதீ புத்ர ருணநாசம் கரோது மே ((
1) times)
பிரும்மாவால் உலக ஸ்ருஷ்டிக்கு முன்னால் கார்யசித்திக்காக நன்கு பூஜிக்கப்பட்டபார்வதீ குமாரன் கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துக் கடன்களையும் போக்கஅனுக்ரஹிக்கட்டும்.
த்ரிபுரஸ்ய வதாத் பூர்வம் சம்புனா ஸம்யகர்சித
ஸதைவ பார்வதீ புத்ர ருணநாசம் கரோது மே ((
2) times)
திரிபுர சம்ஹாரத்திற்குப் போகும் முன்பு பரமேஸ்வரனால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதீகுமாரன் கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.
ஹிரண்ய கசிப்வாதீநாம் வதார்த்தே விஷ்ணுநா அர்ச்சித
ஸதைவ பார்வதீ புத்ர ருணநாசம் கரோது மே ((
3) times)
ஹிரண்யகசிபு போன்ற அரக்கர்களை வதிக்கும் முன்பு மஹாவிஷ்ணுவால் பூஜிக்கப்பட்ட பார்வதீகுமாரன் கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.
மஹிஷஸ்ய வதே தேவ்யா கணநாத ப்ரபூஜித
ஸதைவ பார்வதீ புத்ர ருணநாசம் கரோது மே ((
4) times)
மகிஷாசுரனை ஸம்ஹரிக்கும் முன் பார்வதீ தேவியால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.
தாரகஸ்ய வதாத் பூர்வம் குமாரேண ப்ரபூஜித
ஸதைவ பார்வதீ புத்ர ருணநாசம் கரோது மே ((
5) times)
தாரகாஸீரனை வதைக்கும் முன், ஸ்ரீ சுப்ரமண்யரால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.
பாஸ்கரேண கணேசோ ஹி பூஜிதஸ்ய ஸ்வஸித்தயே
ஸதைவ பார்வதீ புத்ர ருணநாசம் கரோது மே ((
6) times)
சூரிய தேவனால் தனது கார்ய ஸித்திகாக நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.
சசிநா காந்தி விருத்யர்த்தம் பூஜிதோ கணநாயக
ஸதைவ பார்வதீ புத்ர ருணநாசம் கரோது மே ((
7) times)
தனது அழகு நன்கு வளர்வதற்காக சந்திரனால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.
பாலநாய ச தபஸாம் விஸ்வாமித்ரேண பூஜித
ஸதைவ பார்வதீ புத்ர ருணநாசம் கரோது மே ((
8) times)
தனது தபஸ்ஸைக் காப்பாற்றிக்கொள்ள விஸ்வாமித்த்ர மஹர்ஷியால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன்கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.
கணேச சரணம்…..

Share this song