Raaja Thaaveethin
Music | |||
Lyrics | |||
Movie | Christian |
ராஜன் தாவீதின் ஊரினிலே
ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
மந்தையைக் காக்க
விண்தூதர்கள் இறங்க
விண் ஜோதி கண்டவரே
திகையாதே கலங்தாதே
மகிழ்விக்கும் செய்தியுண்டு
ராஜாதி ராஜன் வல்லமைத் தேவன்
மானிடனாய் உதித்தார்
ஒரு மாட்டுத் தொழுவத்தினில்
அன்னை மரியின் மடியினில்
புல்லணை மீதினிலே
கடுங்குளிர் நேரத்தில்
பாலகனாய் பிறந்தார்
நட்சத்திரத்தின் ஒளியிலே
மூன்று ஞானியர் வந்தனரே
பொன் வெள்ளைத் தூபம்
காணிக்கையேந்தி
பாதம் பணிந்தனரே