Paavathin Palan Naragam

Music
Lyrics
MovieChristian
பாவத்தின் பலன் நரகம் -
ஓ பாவி நடுங்கிடாயோ,
கண் காண்பதெல்லாம் அழியும்
காணாததல்லோ நித்தியம்
இயேசு இராஜா வருவார்
இன்னுங் கொஞ்ச காலந்தான்
மோட்சலோகம் சேர்ந்திடுவோம்
உலக இன்பம் நம்பாதே,
அதின் இச்சை யாவும் ஒழியும்
உன் ஜீவன் போகும் நாளிலே,
ஓர் காசும்கூட வராதே
உன் காலமெல்லாம் போகுதே,
உலக மாய்கையிலே,
ஓ தேவகோபம் வருமுன்,
உன் மீட்பரண்டை வாராயோ
தேவன்பின் வெள்ளம் ஓடுதே,
கல்வாரி மலை தனிலே
உன் பாவம் யாவும் நீங்கிப்போம்,
அதில்ஸ்நானம்செய்வதாலே.
மாபாவியான என்னையும், என்
நேசர் ஏற்றுக் கொண்டாரே
ஒபாவி நீயும் ஓடிவா,
தேவாசீர்வாதம் பெறுவாய்