Paava Sanjalathai Ondril

Music
Lyrics
MovieChristian
பாவ சஞ்சலத்தை நீக்க,
பிராண சிநேகிதர் உண்டே
பாவ பாரம் தீர்ந்துபோக
மீட்பர் பாதம் தஞ்சமே
சாலதுக்க துன்பத்தாலே
நெஞ்சம் நொந்து சோருங்கால்
துன்பம் இன்பமாக மாறும்,
ஊக்கமான ஜெபத்தால்.
கஷ்டநஷ்டம் உண்டானாலும்
இயெசுவண்டை சேருவோம்
மோச நாசம் நேரிட்டாலும்
ஜெப தூபம் காட்டுவோம்
நீக்குவாரே நெஞ்சின்
நோவை பலவீனம் தாங்குவார்
நீக்குவாரே மனச்சோர்வை,
தீயகுணம் மாற்றுவார்.
பலவீனமான போதும்
கிருபாசனம் உண்டே
பந்து ஜனம் சாகும்
போதும் புகலிடம் இதுவே
ஒப்பில்லாத பிராண நேசா
உம்மை நம்பி நேசிப்போம்
அளவற்ற அருள் நாதா!
உம்மை நோக்கி கெஞ்சுவோம்