narpathu-naal-raappagal - Christian Tamil Song Lyrics

Narpathu Naal Raappagal Thumbnail

Song Details

Songnarpathu-naal-raappagal
Music
Lyrics
Release Date

Tamil Lyrics

நாற்பது நாள் ராப் பகல்
வனவாசம் பண்ணினீர்
நாற்பது நாள் ராப் பகல்
சோதிக்கப்பட்டும் வென்றீர்
ஏற்றீர் வெயில் குளிரை
காட்டு மிருகத் துணை
மஞ்சம் உமக்குத் தரை
கல் உமக்குப் பஞ்சணை.
உம்மைப் போல் நாங்களும்
லோகத்தை வெறுக்கவும்
உபவாசம் பண்ணவும்
ஜெபிக்கவும் கற்பியும்.
சாத்தான் சீறி எதிர்க்கும்
போதெம் தேகம் ஆவியை
சோர்ந்திடாமல் காத்திடும்
வென்றீரே நீர் அவனை.
அப்போதெங்கள் ஆவிக்கும்
மா சமாதானம் உண்டாம்
தூதர் கூட்டம் சேவிக்கும்
பாக்கியவான்கள் ஆகுவோம்

Share this song