Nan Pramiththu Nindru

Music
Lyrics
MovieChristian
நான் பிரம்மித்து நின்று பேரன்பின்
பிரவாகத்தை நோக்கிப் பார்த்தேன்
என் உள்ளத்தில் மெய்ச் சமாதானம்
சம்பூரணமாய் அடைந்தேன்
மா தூய உதிரத்தால்
என் பாவம் நீங்கிக் கண்டேன்
இயேசையரின் இரட்சிப்பினால்
நான் ஆறுதல் கண்டடைந்தேன்
முன்னாளில் இவ்வாறுதல் காண
ஓயாமல் பிரயாசப்பட்டேன்
வீண் முயற்சி நீங்கின போதோ
என் மீட்பரால் அருள் பெற்றேன்
தம் கரத்தை என் மீதில் வைத்து
நீ சொஸ்தமாவாய் என்றனர்
நான் அவரின் வஸ்திரம் தொட
ஆரோக்கியம் அருளினார்
எந்நேரமும் புண்ணிய நாதர்
என் பக்கத்தில் விளங்குவார்
தம் முகத்தின் அருள் பிரகாசம்
என் பேரிலே வீசச் செய்வார்