Nam Meetpar Yesu

Music
Lyrics
MovieChristian
நல் மீட்பர் இயேசு நாமமே
என் காதுக்கின்பமாம்
புண்பட்ட நெஞ்சை ஆற்றவே
ஊற்றுண்ட தைலமாம்
அந்நாமம் நைந்த ஆவியை
நன்றாகத் தேற்றுமே
துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தை
திடப்படுத்துமே
பசித்த ஆத்துமாவுக்கு
மன்னாவைப்போலாகும்
இளைத்துப்போன ஆவிக்கு
ஆரோக்கியம் தந்திடும்
என் ரட்சகா, என் கேடகம்
என் கோட்டையும் நீரே
நிறைந்த அருள் பொக்கிஷம்
அனைத்தும் நீர்தாமே