Nalliravil Maa Thelivaai

Music
Lyrics
MovieChristian
நள்ளிரவில் மா தெளிவாய்
மாண் பூர்வ கீதமே
விண் தூதர் வந்தே பாடினார்
பொன் வீணை மீட்டியே;
“மாந்தர்க்கு சாந்தம் நல் மனம்
ஸ்வாமி அருளாலே;”
அமர்ந்தே பூமி கேட்டதாம்
விண் தூதர் கீதமே.
இன்றும் விண் விட்டுத் தூதர்கள்
தம் செட்டை விரித்தே,
துன்புற்ற லோகம் எங்குமே
இசைப்பார் கீதமே;
பூலோகக் கஷ்டம் தாழ்விலும்
பாடுவார் பறந்தே;
பாபேல் கோஷ்டத்தை அடக்கும்
விண் தூதர் கீதமே.