Naan Ummai Patri

Music
Lyrics
MovieChristian
நான் உம்மைப்பற்றி இரட்சகா
வீண் வெட்கம் அடையேன்
பேரன்பைக் குறித்தாண்டவா
நான் சாட்சி கூறுவேன்
சிலுவையண்டையில் நம்பி
வந்து நிற்கையில்
பாவப் பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
எந்த நேரமும் எனதுள்ளத்திலும்
பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்
ஆ, உந்தன் நல்ல நாமத்தை,
நான் நம்பி சார்வதால்
நீர் கைவிடீர்! இவ்வேழையை,
காப்பீர் தேவாவியால்
மா வல்ல வாக்கின் உண்மையை,
கண்டுணரச் செய்தீர்
நான் ஒப்புவித்த பொருளை,
விடாமல் காக்கிறீர்