krishthuvukul-vaalum-enaku - Christian Tamil Song Lyrics

Krishthuvukul Vaalum Enaku Thumbnail

Song Details

Songkrishthuvukul-vaalum-enaku
Music
Lyrics
Release Date

Tamil Lyrics

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு
கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு
என்னென்ன துன்பம் வந்தாலும்
நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும்
நான் சோர்ந்து போகமாட்டேன்
என் ராஜா முன்னே செல்கிறார்
வெற்றிப் பவனி செல்கிறார்
குருத்தோலை கையில் எடுத்து
நான் ஓசன்னா பாடிடுவேன்
சாத்தானின் அதிகாரமெல்லாம்
என் நேசர் பறித்துக்கொண்டார்
சிலுவையில் அறைந்துவிட்டார்
காலாலே மிதித்துவிட்டார்
பாவங்கள் போக்கிவிட்டார்
சாபங்கள் நீக்கிவிட்டார்
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன் சுகமானேன்
மேகங்கள் நடுவினிலே
என்நேசர் வரப்போகிறார்
கரம்பிடித்து அழைத்துச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்

Share this song