Kalippudan Kooduvom

Music
Lyrics
MovieChristian
களிப்புடன் கூடுவோம்,
கர்த்தரை நாம் போற்றுவோம்
அவர் தயை என்றைக்கும்
தாசரோடு நிலைக்கும்.
ஆதிமுதல் அவரே
நன்மை யாவும் செய்தாரே
அவர் தயை என்றைக்கும்
மாந்தர்மேலே சொரியும்.
இஸ்ரவேலைப் போஷித்தார்,
நித்தம் வழி காட்டினார்
அவர் தயை என்றைக்கும்
மன்னாபோலே சொரியும்.
வானம் பூமி புதிதாய்
சிஷ்டிப்பாரே ஞானமாய்
அவர் தயை என்றைக்கும்
அதால் காணும் யாருக்கும்.