Kaal Mithikkum Thesamellam

Music
Lyrics
MovieChristian
கால் மிதிக்கும் தேசமெல்லாம் - என்
கர்த்தருக்குச் சொந்தமாகும்
கண்பார்க்கும் பூமியெல்லாம்
கல்வாரி கொடி பறக்கும்
பறக்கட்டும் பறக்கட்டும்
சிலுவையின் ஜெயக்கொடி
அல்லேலூயா
உயரட்டும் உயரட்டும்
இயேசுவின் திருநாமம்
அல்லேலூயா
எழும்பட்டும் எழும்பட்டும்
கிதியோனின் சேனைகள்
அல்லேலூயா
முழங்கட்டும் முழங்கட்டும்
இயேசுதான் வழியென்று
அல்லேலூயா
செல்லட்டும் செல்லட்டும்
ஜெபசேனை துதிசேனை
அல்லேலூயா
வெல்லட்டும் வெல்லட்டும்
எதிரியின் எரிகோவை
அல்லேலூயா
திறக்கட்டும் திறக்கட்டும்
சுவிசேஷ வாசல்கள்
அல்லேலூயா
வளரட்டும் வளரட்டும்
அபிஷேகத் திருச்சபைகள்
அல்லேலூயா