Jeevanulla Devane

Music
Lyrics
MovieChristian
ஜீவனுள்ள தேவனே வாரும்
ஜீவ பாதையிலே நடத்தும்
ஜீத்தண்ணீர் ஊறும் ஊற்றிலே
ஜீவன் பெற என்னை நடத்தும்
இயேசுவே நீர் பெரியவர்
இயேசுவே நீர் பரிசுத்தர்
இயேசுவே நீர் நல்லவர்
இயேசுவே நீர் வல்லவர்
பாவிகள் துரோகிகள் ஐயா
பாவ ஆதாம் மக்களே தூயா
பாதகர் எம் பாவம் போக்கவே
பாதகன் போல் தொங்கினீரல்லோ
ஐந்து கண்ட மக்களுக்காக
ஐந்து காயமேற்ற நேசரே
நொந்துருகி வந்த மக்கள் மேல்
நேச ஆவி வீசச் செய்குவீர்
வாக்குத்தத்தம் செய்த கர்த்தரே
வாக்கு மாறா உண்மை நாதனே
வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்
வல்ல ஆவி மாரி ஊற்றுவீர்
நியாயத்தீர்ப்பின் நாள் நெருங்குதே
நேசர் வர காலமாகுதே
மாய லோகம் நம்பி மாண்டிடும்
மானிடரை மீட்க மாட்டீரோ?