Iththarai Maanthare
Music | |||
Lyrics | |||
Movie | Christian |
இத்தரை மாந்தரே நித்திரை தெளிவீர்
இயேசுவின் சுவிசேஷம் கூற எழுந்து செல்வீர்
இயேசு நாமம் கூற பணிந்து செல்லுவீர்
யோசனையோடு கூட துணிந்து செல்லுவீர்
பகல் சென்று போயிற்று இரவும் ஆயிற்று
இடறலின் காலமோ எங்குமுண்டாயிற்று
மானிட உள்ளங்கள் மாய்மாலம் பேசுது
முடிவு காலத்தில் நீ சேவை செய்திட
பூமி அதிர்ந்தது பஞ்சங்கள் வந்தது
வஞ்சக மாந்தரால் வாதை நிறைந்தது
தஞ்சம் அவர் உண்டு தாரணி தெரிந்திட
அஞ்சாமல் கெஞ்சி நீ சேவை செய்திட
யுத்தங்கள் நேர்ந்தது சித்தம் நிறைவேறுது
பக்தர் கூட்டங்கள் பரனையே தேடுது
சத்திய வசனமோ எங்குமே கேட்குது
நித்திய ராஜ்யம் சேர்க்க ஒரே மனதாய்