Igamanudeva

Music
Lyrics
MovieChristian
இகமனுதேவா நமஸ்கரிப்பேன்
இயேசு தயாளா சரணடைந்தேன்
மாசணுகாத திரு உருவே
மகிமையைத் துறந்த எம்பரம் பொருளே
தீமைக் கண்டேன் என் இதயத்திலே
தாழ் பணிந்தேன் உம் பாதத்திலே
குருபர நாதா தேடி வந்தீர்
குறை நீக்க மனுவாய் அவதரித்தீர்
ஞானியர் போற்றிய தூயவனே
மேய்ப்பர்கள் வணங்கின மறையவனே
ஆர்ப்பரித்து உம் புகழ் உரைப்பேன்
ஆனந்தமாய் நின் பணிபுரிவேன்
அகிலமே உமது அடிதொடர
ஆணை பெற்றேன் நான் முன் நடக்க
காலத்தால் அழிந்திடா காவலனே
கன்னியின் மைந்தனாய் வந்தவனே
மாமன்னனாய் வருவீரே
முகமுகமாய் காண்பேனோ
திரிமுதல் தேவா காப்பீரே
தினம் எமை கழுவி மீட்பீரே