Ennil Adanga

Music
Lyrics
MovieChristian
எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் - தேவா
என்றென்றும் நான் பாடுவேன்
இந்நாள் வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே
பூமியில் வாழ்கின்ற யாவும் அதின் மேல் உள்ள ஆகாயமும்
வான் தூதர் சேனைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே!
சூரிய சந்திரரோடே சகல நட்சத்திரக் கூட்டமும்,
ஆகாய பறவைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே!
காட்டினில் வாழ்கின்ற யாவும் கடும் காற்றும் பனித் தூறலும்
நாட்டினில் வாழ்கின்ற யாவும் நாதா உம்மைப் போற்றுதே!
பாவ மனுக்குலம் யாவும் தேவா உம் அன்பினை உணர்ந்தே
சிலுவையின் தியாகத்தைக் கண்டு ஓயா துதி பாடுதே!