Enakkum Idam Undu
Music | |||
Lyrics | |||
Movie | murugan |
எனக்கும் இடம் உண்டு-அருள்
மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு-அருள்
மணக்கும் முருகன் மலரடி நிழலில்
கார்த்திகை விளக்கு பெண்களுடன்-திரு
காவடி சுமக்கும் தொண்டருடன்..
கார்த்திகை விளக்கு பெண்களுடன்-திரு
காவடி சுமக்கும் தொண்டருடன்….
தினம் கூப்பிடும் ஞானமலர்களுடன்-ஒரு
புல்லாய் முளைத்து தடுமாறும்
புல்லாய் முளைத்து தடுமாறும்….
எனக்கும் இடம் உண்டு-அருள்
மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு….
நேற்றைய வாழ்வு அலங்கோலம்-அருள்
நெஞ்சில் கொடுத்தது நிகழ்காலம்
நேற்றைய வாழ்வு அலங்கோலம்-அருள்
நெஞ்சில் கொடுத்தது நிகழ்காலம்….
வரும் காற்றில் அணையா சுடர்போலும்-இனி
கந்தன் தருவான் எதிர்காலம்
கந்தன் தருவான் எதிர்காலம்….
எனக்கும் இடம் உண்டு-அருள்
மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு….
ஆடும் மயிலே என் மேனி – அதில்
அழகிய தோகை என் உள்ளம்
ஆடும் மயிலே என் மேனி – அதில்
அழகிய தோகை என் உள்ளம்
நான் உள்ளம் எனும் தோகையினால் கந்தன்
உறவு கண்டேன் ஆசையினால் கந்தன்
உறவு கண்டேன் ஆசையினால்
எனக்கும் இடம் உண்டு-அருள்
மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு….
ஓம் முருகா போற்றி… அரோகரா