Ella Magimaiyum

Music
Lyrics
MovieChristian
எல்லா மகிமையும் இயேசு ராஜாவுக்கே
எல்லா புகழ்ச்சியும் தேவாதி தேவனுக்கே
துதியும் மகா கனமும் உமக்கே உரியது
இயேசுவே கிறிஸ்துவே நீர் போதும் வாழ்விலே
இயேசுவே நீர் என் பிராண நாயகன்
இயேசுவே நீர் என் ஏக இரட்சகன்
இயேசுவே நீர் என் ஜீவனானவர் - அல்லேலுயா
இயேசுவே நீர் மாத்திரம் போதும் வாழ்விலே
ஆதியும் அந்தமும் நீர்தான் இயேசுவே
ஆத்ம மீட்பரும் நீர் மாத்ரம் இயேசுவே
ஆழமாம் சத்தியத்தில் நடத்தும் மேய்ப்பரே
தானமாய் நிதானமாய் என்னை மாற்றினீரே
பூமி மாறிடினும் உம் வாக்கு மாறிடாதே
வானம் ஒழிந்திடினும் உம் வார்த்தை மாறிடாதே
நெருக்கம் மன உருக்கம் வேதனைகள்
மாற்றியே தேற்றின நல் தேவன் நீரே