Dhesame Payapadathe

Music
Lyrics
MovieChristian
தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களிகூறு
சேனையின் கர்த்தர் உன் நடுவில்
பெரிய காரியம் செய்திடுவார்
பலத்தினாலும் அல்லவே
பராக்கிரமும் அல்லவே
ஆவியினாலே ஆகும் என்று
ஆண்டவர் வாக்கு அருளினாரே
தாய் மறந்தாலும் மறவாமல்
உள்ளங்கையில் வரைந்தாரே
வலக்கரத்தாலே தாங்கி உன்னை
சகாயம் செய்து உயர்த்திடுவார்
கசந்த மாறா மதுரமாகும்
கொடிய யோர்தான் அகன்றிடும்
நித்தமும் உன்னை நல்வழி நடத்தி
ஆத்துமாவை நிதம் தேற்றிடுவார்
கிறிஸ்து இயேசு சிந்தையில்
நிலைத்தே என்றும் ஜீவிப்பாய்
ஆவியின் பெலத்தால்
அனுதினம் நிறைந்தே
உத்தம சாட்சியாய் விளங்கிடுவாய்
மாம்சமான யாவர் மீதும்
உன்னத ஆவியைப் பொழிவாரே
ஆயிரமாயிரம் ஜனங்கள் தருவார்
எழும்பி சேவையும் செய்திடுவார்