Deva Devanai

Music
Lyrics
MovieChristian
தேவ தேவனைத் துதித்திடுவோம்
சபையில் தேவன் எழுந்தருள
ஒரு மனதோடு அவர் நாமத்தை
துதிகள் செலுத்திப் போற்றிடுவோம்
அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே
அல்லேலூயா பரிசுத்தர்க்கே
அல்லேலூயா இராஜனுக்கே
எங்கள் காலடி வழுவிடாமல்
எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும்
கண்மணிபோல காத்தருளும்
கிருபையால் நிதம் வழி நடத்தும்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மை கிருபை தொடர்ந்திடவே
தேவ வசனம் கீழ்ப்படிவோம்
தேவ சாயலாய் மாறிடுவோம்
வானத்தில் அடையாளம் தோன்றிடுமே
இயேசு மேகத்தில் வந்திடுவார்
நாமும் அவருடன் சேர்ந்திடவே
நம்மை ஆயத்தமாக்கிக் கொள்வோம்