Deiva Aatukutiye

Music
Lyrics
MovieChristian
தெய்வ ஆட்டுக்குட்டியே,
லோகத்தாரின் மீட்பரே,
உம்மால் மீட்கப்பட்ட நான்
தேவரீர்க்கு அடியான்
நீர் என் கோட்டை, தஞ்சமாம்,
ஆர் என் வாழ்வை நீக்கலாம்?
கர்த்தரே, என் உள்ளத்தில்
அருள் தந்தென் மனதில்
அந்தகாரம் நீங்கிட,
அன்பின் தீபம் ஸ்வாலிக்க,
ஆவியின் நல் ஈவையும்
பூர்த்தியாக அளியும்.
எந்த நாழிகையிலே
நீர் வந்தாலும், இயேசுவே,
உம்மையே நான் சந்திக்க,
கண்ணால் கண்டு களிக்க,
நான் விழித்திருக்கவே
நித்தம் ஏவிவாருமே.