Ayyappanin Malaikku
Music | |||
Lyrics | |||
Movie | ayyapan |
ஐயப்பனின் மலைக்குப் போக மாலை போட்டுக்கோ
வழிமுறைகள் சொல்லித்தாரேன் நீயும் கேட்டுக்கோ சாமி
ஐயப்பனின் மலைக்குப் போக மாலை போட்டுக்கோ
வழிமுறைகள் சொல்லித்தாரேன் நீயும் கேட்டுக்கோ சாமி
பலவருஷம் மலைக்கு போன பழுத்த சாமியை
பார்த்து தேடி அவர்பாதம் நீ பணியனும்
குருவாக அவரை நெஞ்சில் ஏத்துக் கொள்ளனும்
துளசிமாலை அவர் கையால் நீ வாங்கணும்
காலையிலே நீராடி நீரணியணும்
கன்னிமூல கணபதியை நீ நினைக்கணும்
மாலையை குரு கையாலே நீ அணியணும்
மனதில் ஐயன் உருவகத்தை நீ தாங்கணும்
ஐயப்பனின் மலைக்குப் போக மாலை போட்டுக்கோ
வழிமுறைகள் சொல்லித்தாரேன் நீயும் கேட்டுக்கோ சாமி
ஆறுவாரம் கடுமையாக நோன்பிருக்கணும்
ஆடையிலே கருப்பு நீலம் நிறமிருக்கணும்
ஆடையிலே காவி நீலம் நிறமிருக்கணும்
காலையிலும் மாலையிலும் கோவில் போகணும்
ஐயப்பனின் மலைக்குப் போக மாலை போட்டுக்கோ
வழிமுறைகள் சொல்லித்தாரேன் நீயும் கேட்டுக்கோ சாமி
கட்டாயும் ஆசைகளை அடக்கி வைக்கணும்
அனுதினமும் பஜனைகளில் கலந்து கொள்ளணும்
அன்னதானம் முடிஞ்சவரை நீ செய்யணும்
இருமுடியை உந்தலையில் நீ சுமக்கணும்
இறுதிவரை கால; நடையாய் மலை கடக்கணும்
ஐயப்பனின் மலைக்குப் போக மாலை போட்டுக்கோ
வழிமுறைகள் சொல்லித்தாரேன் நீயும் கேட்டுக்கோ சாமி
பம்பையிலே நீராடி விளக்கேத்தணும்
ஐயன் நாமம் உள்ளத்திலே குடியேத்தணும்
பதினெட்டுப் படி ஏறி அவனைப் பாக்கணும்
பந்த பாச சுமைகளெல்லாம் நீ போக்கணும்
இருமுடியில் உள்ள நெய்யை நீ படைக்கணும்
திருப்படியில் தேங்காயை நீ உடைக்கணும்
மகரஜோதி தரிசனத்தில் மனம் நிறையணு
மங்கலங்கள் நாளும் நாளும் பொங்கி வழியணும்
ஐயப்பனின் மலைக்குப் போக மாலை போட்டுக்கோ
வழிமுறைகள் சொல்லித்தாரேன் நீயும் கேட்டுக்கோ சாமி