Aathi Thiruvaarthai

Music
Lyrics
MovieChristian
ஆதித் திருவார்த்தை திவ்விய
அற்புதப் பாலனாகப் பிறந்தார்
ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட
ஆதிரையோரையீ டேற்றிட
மாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்து
மரியாம் கன்னியிட முதித்து
மகிமையை மறந்து தமை வெறுத்து
மனுக்குமாரன் வேஷமாய்
உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்
மின்னுச்சீர் வாசகர் மேனிநிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே சர்வ
நன்மைச் சொருபனார் ரஞ்சிதனார்
தாம் தாம் தன்னரர் வன்னரர்
தீம் தீம் தீமையகற்றிட
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ
ஷமென சோபனம்பாடவே
இங்கிர்த இங்கிர்த இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட – ஆதி
ஆதாம் சாதி ஏவினர் ஆபிரகாம் விசுவாசவித்து
பூதர் சிம்மாசனத்தாளுகை செய்வோர்
ஈசாய் வங்கிஷத்தானுதித்தார்
பூலோகப் பாவ விமோசனர்
பூரண கிருபையின் வாசனர்
மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன்
மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார்
அல்லேலூயா! சங்கீர்த்தனம்
ஆனந்த கீதங்கள் பாடவே
அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட
அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார்