1008 Amman Pottri

Music
Lyrics
Movieamman
1. ஓம் அகசையே போற்றி
2. ஓம் அகந்தை அழித்து அருள்பவளே போற்றி
3. ஓம் அகமதி அழிப்பவளே போற்றி
4. ஓம் அகிலத்தை ஆள்பவளே போற்றி
5. ஓம் அகிலாண்டேசுவரியே போற்றி
6. ஓம் அக்கரமாலைக் கையாளே போற்றி
7. ஓம் அக்கினிக் கண்ணாளே போற்றி
8. ஓம் அங்கணியே போற்றி
9. ஓம் அங்கயற்கண்ணியே போற்றி
10. ஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி
11. ஓம் அங்கையில் தீ ஏந்தியவளே போற்றி
12. ஓம் அசலகன்னியே போற்றி
13. ஓம் அசுரரை வதைத்தவளே போற்றி
14. ஓம் அசுரர்க்கு வரமளித்தவளே போற்றி
15. ஓம் அச்சம் தவிர்ப்பவளே போற்றி
16. ஓம் அஞ்சனாட்சியே போற்றி
17. ஓம் அஞ்சி அழைப்போர்க்கு அருள்பவளே போற்றி
18. ஓம் அஞ்செழுத்தின் ஆதியே போற்றி
19. ஓம் அஞ்சேலென அருள்பவளே போற்றி
20. ஓம் அஞ்சொலாளே போற்றி
21. ஓம் அடங்கு பேரண்டமே போற்றி
22. ஓம் அடியாரை அமருலகு சேர்ப்பவளே போற்றி
23. ஓம் அடியார் தீவினைகள் தீர்ப்பவளே போற்றி
24. ஓம் அடியார்க்கு அமுதானாவளே போற்றி
25. ஓம் அடியார்க்கு அம்மையே போற்றி
26. ஓம் அடியார்க்கு எளியவளே போற்றி
27. ஓம் அடியார்க்குத் துணையே போற்றி
28. ஓம் அடைக்கலம் தருபவளே போற்றி
29. ஓம் அணுகாதாருக்குப் பிணியே போற்றி
30. ஓம் அணுகியவர்க்கு மருந்தே போற்றி
31. ஓம் அண்டங்கள் படைத்தவளே போற்றி
32. ஓம் அண்டம் நடுங்க ஆடினவளே போற்றி
33. ஓம் அண்டரைக் காத்தவளே போற்றி
34. ஓம் அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளியே போற்றி
35. ஓம் அண்ணாமலை அம்பிகையே போற்றி
36. ஓம் அதிகை நாயகியே போற்றி
37. ஓம் அந்தமே போற்றி
38. ஓம் அந்தம் அறுப்பவளே போற்றி
39. ஓம் அந்தரியே போற்றி
40. ஓம் அபிராமியே போற்றி
41. ஓம் அப்பனின் திருமேனியே போற்றி
42. ஓம் அமருலகு சேர்ப்பவளே போற்றி
43. ஓம் அமரையே போற்றி
44. ஓம் அமலையே போற்றி
45. ஓம் அமிர்த முகிழாம்பிகையே போற்றி
46. ஓம் அமிர்தகர வல்லியே போற்றி
47. ஓம் அமுத நாயகியே போற்றி
48. ஓம் அமுதகடேசரின் நாயகியே போற்றி
49. ஓம் அமைதி அளிப்பவளே போற்றி
50. ஓம் அம்பணத்தியே போற்றி
51. ஓம் அம்பலக் கூத்தனின் நாயகியே போற்றி
52. ஓம் அம்பாலிகையே போற்றி
53. ஓம் அம்பிகையே போற்றி
54. ஓம் அம்மையே போற்றி
55. ஓம் அரத்த நிறத்தாளே போற்றி
56. ஓம் அரத்துறை நாயகியே போற்றி
57. ஓம் அரவே போற்றி
58. ஓம் அரி லக்குமியே போற்றி
59. ஓம் அரியேறியே போற்றி
60. ஓம் அரு உருவே போற்றி
61. ஓம் அருஞ்சொல் நாயகியே போற்றி
62. ஓம் அருட் கனலே போற்றி
63. ஓம் அருந்தவச் செல்வியே போற்றி
64. ஓம் அருமருந்தே போற்றி
65. ஓம் அருமறையே போற்றி
66. ஓம் அருமையே போற்றி
67. ஓம் அருள் ஒளி ஆனவளே போற்றி
68. ஓம் அருள் மழையே போற்றி
69. ஓம் அருள் வடிவே போற்றி
70. ஓம் அலகைக் கொடியாளே போற்றி
71. ஓம் அலந்தாருக்குத் துணையே போற்றி
72. ஓம் அலையா மனம் அருள்பவளே போற்றி
73. ஓம் அல்லல் களைபவளே போற்றி
74. ஓம் அல்லியங்கோதையே போற்றி
75. ஓம் அவலம் நீக்குபவளே போற்றி
76. ஓம் அவனிவிடங்கியே போற்றி
77. ஓம் அவா அறுப்பவளே போற்றி
78. ஓம் அவிநாசி அம்மையே போற்றி
79. ஓம் அழகம்மையே போற்றி
80. ஓம் அழகிய நாயகியே போற்றி
81. ஓம் அழகின் எழிலே போற்றி
82. ஓம் அழகெழுதலாகா அருளம்மையே போற்றி
83. ஓம் அழகே போற்றி
84. ஓம் அழல் ஏந்தியவளே போற்றி
85. ஓம் அழுக்காறு நீக்குபவளே போற்றி
86. ஓம் அழுதவர் கண்ணீர் துடைப்பவளே போற்றி
87. ஓம் அறத்தின் செல்வியே போற்றி
88. ஓம் அறத்தின் பலனே போற்றி
89. ஓம் அறமே போற்றி
90. ஓம் அறம் செழிக்க அருள்பவளே போற்றி
91. ஓம் அறம் வளர்த்த நாயகியே போற்றி
92. ஓம் அறிகின்ற மூலமே போற்றி
93. ஓம் அறியாமை அகற்றுபவளே போற்றி
94. ஓம் அறிவில் உணர்வே போற்றி
95. ஓம் அறிவுப் பேரின்பமே போற்றி
96. ஓம் அறிவே போற்றி
97. ஓம் அறுமறைச் சிகரத்து அணியே போற்றி
98. ஓம் அற்றாருக்கு உற்ற துணையே போற்றி
99. ஓம் அனலே போற்றி
100. ஓம் அனலேந்தி ஆடும் அம்மையே போற்றி
101. ஓம் அனுபவையே போற்றி
102. ஓம் அனைத்துக்கும் ஆதாரமே போற்றி
103. ஓம் அன்புக்கு அடிமையே போற்றி
104. ஓம் அன்பும் அறமும் வளர்ப்பவளே போற்றி
105. ஓம் அன்புறு சிந்தையே போற்றி
106. ஓம் அன்பே போற்றி
107. ஓம் அன்பொளி ஆனவளே போற்றி
108. ஓம் அன்ன இலக்குமியே போற்றி
109. ஓம் அன்னபூரணியே போற்றி
110. ஓம் அன்னையே போற்றி
111. ஓம் ஆகமப் பொருளே போற்றி
112. ஓம் ஆக்கியவை அழிப்பவளே போற்றி
113. ஓம் ஆங்காரியே போற்றி
114. ஓம் ஆசாபாசம் அகற்றுபவளே போற்றி
115. ஓம் ஆசு நீக்கி அருள்பவளே போற்றி
116. ஓம் ஆசைகளை அறுப்பவளே போற்றி
117. ஓம் ஆதார சத்தியே போற்றி
118. ஓம் ஆதார முடிவே போற்றி
119. ஓம் ஆதியே அந்தமே போற்றி
120. ஓம் ஆதிரையே போற்றி
121. ஓம் ஆமாத்தூர் அம்பிகையே போற்றி
122. ஓம் ஆயிரங் கண்ணாளே போற்றி
123. ஓம் ஆரணியே போற்றி
124. ஓம் ஆரா அமுதே போற்றி
125. ஓம் ஆருயிர்க்கு அகரமே போற்றி
126. ஓம் ஆலகாலியே போற்றி
127. ஓம் ஆலவாய் அழகியே போற்றி
128. ஓம் ஆலவூணியே போற்றி
129. ஓம் ஆலால சுந்தரியே போற்றி
130. ஓம் ஆவடுதுறை அம்மையே போற்றி
131. ஓம் ஆவதும் அழிவதும் உன்செயலே போற்றி
132. ஓம் ஆவுடைநாயகியே போற்றி
133. ஓம் ஆழியும் ஆகாயமுமானவளே போற்றி
134. ஓம் ஆளியூர்தியே போற்றி
135. ஓம் ஆறாதாரத்து ஒளியே போற்றி
136. ஓம் ஆறு சமயமும் கடந்தவளே போற்றி
137. ஓம் ஆறு பகையும் அறுப்பவளே போற்றி
138. ஓம் ஆனந்த வடிவே போற்றி
139. ஓம் ஆனந்த வல்லியே போற்றி
140. ஓம் ஆனந்தியே போற்றி
141. ஓம் ஆன்ம விளக்கமே போற்றி
142. ஓம் ஆன்றோருக்கு அமுதே போற்றி
143. ஓம் இகபரம் கடந்தவளே போற்றி
144. ஓம் இகன் மகளே போற்றி
145. ஓம் இசக்கியே போற்றி
146. ஓம் இசையின் இனிமையே போற்றி
147. ஓம் இசையே போற்றி
148. ஓம் இடர் களையும் அம்மையே போற்றி
149. ஓம் இடை மருதன் நாயகியே போற்றி
150. ஓம் இடையாற்று அம்மையே போற்றி
151. ஓம் இதயத்தில் இருப்பவளே போற்றி
152. ஓம் இமயவதியே போற்றி
153. ஓம் இமயவல்லியே போற்றி
154. ஓம் இமவான் மகளே போற்றி
155. ஓம் இம்மை மறுமை அளிப்பவளே போற்றி
156. ஓம் இயக்கமே போற்றி
157. ஓம் இயக்கியே போற்றி
158. ஓம் இயங்கும் எழுத்தே போற்றி
159. ஓம் இயந்திர உருவே போற்றி
160. ஓம் இயந்திரத்தின் பலனே போற்றி
161. ஓம் இயந்திரத்து உட்பொருளே போற்றி
162. ஓம் இரத்தையே போற்றி
163. ஓம் இரப்போர்க்கு ஈயும் இறையே போற்றி
164. ஓம் இரவு பகலற்ற இடமே போற்றி
165. ஓம் இரீங்காரியே போற்றி
166. ஓம் இருநிதியே போற்றி
167. ஓம் இருபுலத்தாற் ஏத்தும் தாளடியே போற்றி
168. ஓம் இருள் கெடுப்பவளே போற்றி
169. ஓம் இருள் புரை ஈசியே போற்றி
170. ஓம் இருள்மாயப் பிறப்பறுப்பவளே போற்றி
171. ஓம் இளங்கொம்பன்னாளே போற்றி
172. ஓம் இறைஞ்சுவாரைக் காப்பவளே போற்றி
173. ஓம் இறைவியே போற்றி
174. ஓம் இன்பக் கடலே போற்றி
175. ஓம் இன்பம் தழைக்க அருள்பவளே போற்றி
176. ஓம் இன்புறு கண்ணியே போற்றி
177. ஓம் இன்மொழி தந்து அருள்பவளே போற்றி
178. ஓம் இன்னருள் சுரந்து அருள்பவளே போற்றி
179. ஓம் இன்னல் தீர்ப்பவளே போற்றி
180. ஓம் இன்னுயிரே போற்றி
181. ஓம் ஈகையே போற்றி
182. ஓம் ஈசானியே போற்றி
183. ஓம் ஈசுவரியே போற்றி
184. ஓம் ஈடற்ற தலைவியே போற்றி
185. ஓம் ஈடில்லா சத்தியே போற்றி
186. ஓம் ஈமன் மனையாளே போற்றி
187. ஓம் ஈயென இரவா நிலை தருபவளே போற்றி
188. ஓம் ஈரேழ் உலகும் காப்பவளே போற்றி
189. ஓம் ஈன்ற தாயே போற்றி
190. ஓம் உக்கிர காளியே போற்றி
191. ஓம் உஞ்சேனைக் காளியே போற்றி
192. ஓம் உடலின் உயிரே போற்றி
193. ஓம் உணர்வில் இனியவளே போற்றி
194. ஓம் உணர்வில் கருத்தே போற்றி
195. ஓம் உணர்வே போற்றி
196. ஓம் உண்ணாமுலையே போற்றி
197. ஓம் உத்தமியே போற்றி
198. ஓம் உந்தியில் உறைபவளே போற்றி
199. ஓம் உந்தும் சக்தியே போற்றி
200. ஓம் உமையே போற்றி
201. ஓம் உயர் ஞானம் ஊட்டுபவளே போற்றி
202. ஓம் உயர்நெறி தருபவளே போற்றி
203. ஓம் உயர்வு அளிக்க வல்லவளே போற்றி
204. ஓம் உயிரே போற்றி
205. ஓம் உராசத்தியே போற்றி
206. ஓம் உருத்திரியே போற்றி
207. ஓம் உருவுமாய் அருவுமாய் நின்றவளே போற்றி
208. ஓம் உருவென்று உணரப்படாத மலரடியே போற்றி
209. ஓம் உருவே போற்றி
210. ஓம் உலகநாயகியே போற்றி
211. ஓம் உலகுக்கு உயிரானவளே போற்றி
212. ஓம் உலகெலாம் காத்து அருள்பவளே போற்றி
213. ஓம் உலகெலாம் படைத்தவளே போற்றி
214. ஓம் உலோபம் நீக்கி அருள்பவளே போற்றி
215. ஓம் உவமை இலாளே போற்றி
216. ஓம் உள் உயிர்க்கும் உணவே போற்றி
217. ஓம் உள்ளதினுள் எழும் கருவே போற்றி
218. ஓம் உள்ளத்து ஊறும் தெள்ளமுதே போற்றி
219. ஓம் உள்ளும் புறமுமாய் நின்றவளே போற்றி
220. ஓம் உள்ளுயிர்ப்பே போற்றி
221. ஓம் உள்ளொளி பெருக்கும் உத்தமியே போற்றி
222. ஓம் உள்ளொளியே போற்றி
223. ஓம் உறுபசி அழிப்பவளே போற்றி
224. ஓம் உறுபிணி ஒழிப்பவளே போற்றி
225. ஓம் ஊக்கம் அருள்பவளே போற்றி
226. ஓம் ஊர்த்துவத் தாண்டவியே போற்றி
227. ஓம் ஊழித் தொல்வினை அகற்றுபவளே போற்றி
228. ஓம் ஊழியில் அழியா உத்தமியே போற்றி
229. ஓம் ஊழியே போற்றி
230. ஓம் ஊனம் நீக்குபவளே போற்றி
231. ஓம் ஊனினை உருக்கும் உள்ளொளியே போற்றி
232. ஓம் ஊனின் உள்ளமே போற்றி
233. ஓம் ஊனே போற்றி
234. ஓம் எக்கணமும் எம்மை ஆள்பவளே போற்றி
235. ஓம் எங்கும் நிறைந்தவளே போற்றி
236. ஓம் எண் திசைக்கு அரசியே போற்றி
237. ஓம் எண்டோளியே போற்றி
238. ஓம் எண்ணமே போற்றி
239. ஓம் எண்ணிலா நிதியமே போற்றி
240. ஓம் எண்பேறு தரவல்லாளே போற்றி
241. ஓம் எப்பிறப்பும் மறவாமை தருபவளே போற்றி
242. ஓம் எம பயம் நீக்குபவளே போற்றி
243. ஓம் எம் உளம் குடி கொண்டவளே போற்றி
244. ஓம் எம்மையே போற்றி
245. ஓம் எரியாடி மணாட்டியே போற்றி
246. ஓம் எலுமிச்சை மாலையாளே போற்றி
247. ஓம் எல்லா உயிரும் ஆனவளே போற்றி
248. ஓம் எல்லா உள்ளத்தும் உறைபவளே போற்றி
249. ஓம் எல்லா நலமும் தரவல்லவளே போற்றி
250. ஓம் எல்லா வடிவும் எடுத்தவளே போற்றி
251. ஓம் எல்லாம் அறிந்தவளே போற்றி
252. ஓம் எல்லை கடந்த என்னம்மையே போற்றி
253. ஓம் எல்லை மாரியே போற்றி
254. ஓம் எல்லைநிறை குணத்தவளே போற்றி
255. ஓம் எவ்வுயிரின் இயக்கமும் நீயே போற்றி
256. ஓம் எழிலே போற்றி
257. ஓம் எழில் முடியாளே போற்றி
258. ஓம் எழுதாச் சொல்லின் எழிலே போற்றி
259. ஓம் எளியவளே போற்றி
260. ஓம் என் அம்மையே போற்றி
261. ஓம் என்மலம் அறுப்பவளே போற்றி
262. ஓம் என்றும் இன்பம் தழைக்க அருள்பவளே போற்றி
263. ஓம் என்னாவி காப்பவளே போற்றி
264. ஓம் ஏக நாயகியே போற்றி
265. ஓம் ஏகாம்பரியே போற்றி
266. ஓம் ஏக்கம் தீர்ப்பவளே போற்றி
267. ஓம் ஏடகத்தரசியே போற்றி
268. ஓம் ஏடங்கையாளே போற்றி
269. ஓம் ஏத்துவார் இடர் தீர்ப்பவளே போற்றி
270. ஓம் ஏந்தி அருள் தருபவளே போற்றி
271. ஓம் ஏழுலகாய் நின்றவளே போற்றி
272. ஓம் ஏழைக்கு அருள்பவளே போற்றி
273. ஓம் ஏறேறி ஏழுலகும் வலம் வருபவளே போற்றி
274. ஓம் ஏற்றம் அருள்பவளே போற்றி
275. ஓம் ஏற்றிய ஞான விளக்கே போற்றி
276. ஓம் ஐங்கரன் தாயே போற்றி
277. ஓம் ஐந்தும் வென்றவளே போற்றி
278. ஓம் ஐந்தொழில் புரிபவளே போற்றி
279. ஓம் ஐம்புலன் அடக்க அருள்பவளே போற்றி
280. ஓம் ஐம்முகன் மணாட்டியே போற்றி
281. ஓம் ஐயம் தீர்ப்பவளே போற்றி
282. ஓம் ஐயையே போற்றி
283. ஓம் ஒத்த சங்கரியே போற்றி
284. ஓம் ஒப்பிலா மணியே போற்றி
285. ஓம் ஒப்பிலாவம்மையே போற்றி
286. ஓம் ஒப்புயர்வற்ற ஒளியே போற்றி
287. ஓம் ஒலி அடங்கும் தூமாயையே போற்றி
288. ஓம் ஒலிக்கும் நாதமே போற்றி
289. ஓம் ஒலியே போற்றி
290. ஓம் ஒழிவற நின்றவளே போற்றி
291. ஓம் ஒளிக்கு முதலே போற்றி
292. ஓம் ஒளிப்பிழம்பே போற்றி
293. ஓம் ஒளியாம் விந்துவே போற்றி
294. ஓம் ஒளியின் சுடரே போற்றி
295. ஓம் ஒளிவளர் விளக்கே போற்றி
296. ஓம் ஒற்றைக் காலில் தவம் புரிந்தவளே போற்றி
297. ஓம் ஒன்றா நெஞ்சில் உறைபவளே போற்றி
298. ஓம் ஒன்றுமிலா பெருவெளியே போற்றி
299. ஓம் ஓங்கார நாதமே போற்றி
300. ஓம் ஓங்காரியே போற்றி
301. ஓம் ஓங்கொளி வண்ணமுடையாளே போற்றி
302. ஓம் ஓசைகொடுத்த நாயகியே போற்றி
303. ஓம் ஓசையாம் நாதமே போற்றி
304. ஓம் ஓணேசுவரனின் நாயகியே போற்றி
305. ஓம் ஓதரிய பொருளே போற்றி
306. ஓம் ஓதா வேதமே போற்றி
307. ஓம் ஓர் எழுத்தே போற்றி
308. ஓம் ஓவாப்பிணி ஒழிப்பவளே போற்றி
309. ஓம் கங்கமே போற்றி
310. ஓம் கங்காளியே போற்றி
311. ஓம் கச்சி ஏகம்பனின் நாயகியே போற்றி
312. ஓம் கஞ்சனூர் ஆண்டவளே போற்றி
313. ஓம் கடந்தை நாயகியே போற்றி
314. ஓம் கடம்பவனக் குயிலே போற்றி
315. ஓம் கணக்கு வழக்கைக் கடந்தவளே போற்றி
316. ஓம் கணபதியை ஈன்றவளே போற்றி
317. ஓம் கண்கவர்தேவியே போற்றி
318. ஓம் கண்ணபுரத்தாளே போற்றி
319. ஓம் கண்ணார் அமுதே போற்றி
320. ஓம் கண்ணிற் பாவையே போற்றி
321. ஓம் கண்ணுடை நாயகியே போற்றி
322. ஓம் கதி விதி அமைத்தவளே போற்றி
323. ஓம் கதியே விதியே போற்றி
324. ஓம் கதிரவனும் தொழும் ஒளிப்பிழம்பே போற்றி
325. ஓம் கதிரின் ஒளியே போற்றி
326. ஓம் கதிர் மண்டல நடுவே போற்றி
327. ஓம் கதை ஏந்தியவளே போற்றி
328. ஓம் கபாலினியே போற்றி
329. ஓம் கமலம் ஏந்தியவளே போற்றி
330. ஓம் கமலாம்பிகையே போற்றி
331. ஓம் கயிலை மலையாளே போற்றி
332. ஓம் கரரைகாணாப் பேரொளியே போற்றி
333. ஓம் கரி இலக்குமியே போற்றி
334. ஓம் கருணாகரியே போற்றி
335. ஓம் கருணைக் கடலே போற்றி
336. ஓம் கருதுவார் கருதும் உருவே போற்றி
337. ஓம் கருத்தறிந்து அருள்பவளே போற்றி
338. ஓம் கருத்தாழ் குழலியம்மையே போற்றி
339. ஓம் கருத்தில் நினைவே போற்றி
340. ஓம் கருத்தின் அருத்தமே போற்றி
341. ஓம் கருத்துறு செம்பொன்னே போற்றி
342. ஓம் கருத்தே போற்றி
343. ஓம் கருந்தார்க் குழலியே போற்றி
344. ஓம் கரும வினை தீர்ப்பவளே போற்றி
345. ஓம் கருமணியே போற்றி
346. ஓம் கருமாரியே போற்றி
347. ஓம் கருமையின் வெளியே போற்றி
348. ஓம் கருமையே போற்றி
349. ஓம் கரும்பனையாளம்மையே போற்றி
350. ஓம் கரும்பன்ன சொல்லியம்மையே போற்றி
351. ஓம் கருவழிப் பிறப்பு அறுப்பவளே போற்றி
352. ஓம் கருவியின் காரியமே போற்றி
353. ஓம் கருவில் உயிரே போற்றி
354. ஓம் கருவே போற்றி
355. ஓம் கலகம் தவிர்ப்பவளே போற்றி
356. ஓம் கலி நீக்க வல்லவளே போற்றி
357. ஓம் கலையானத்தியே போற்றி
358. ஓம் கலையின் ஒளியே போற்றி
359. ஓம் கலையூர்தியே போற்றி
360. ஓம் கலையே போற்றி
361. ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
362. ஓம் கவலை, பிணி தீர்ப்பவளே போற்றி
363. ஓம் கழல் பணிந்தோரைக் காப்பவளே போற்றி
364. ஓம் கழுமலத்தாளே போற்றி
365. ஓம் கற்குழி தூர்க்க வல்லவளே போற்றி
366. ஓம் கற்பக வல்லியே போற்றி
367. ஓம் கற்பனை கடந்த சோதியே போற்றி
368. ஓம் கற்றோர் உள்ளத்து உறைபவளே போற்றி
369. ஓம் கற்றோர் ஏத்தும் கழலே போற்றி
370. ஓம் கனங்குழையாளே போற்றி
371. ஓம் கனலே போற்றி
372. ஓம் கனிந்த முக அழகே போற்றி
373. ஓம் கனியினில் இனிமையே போற்றி
374. ஓம் கனியே போற்றி
375. ஓம் கனிவாய்மொழி அம்மையே போற்றி
376. ஓம் காடமர் செல்வியே போற்றி
377. ஓம் காட்சிப் பொருளே போற்றி
378. ஓம் காண இயலாப் பேரொளியே போற்றி
379. ஓம் காண இலிங்கியே போற்றி
380. ஓம் காதோலையாளே போற்றி
381. ஓம் காந்திமதியே போற்றி
382. ஓம் காந்தேசுவரியே போற்றி
383. ஓம் காமம் களைபவளே போற்றி
384. ஓம் காமாட்சியே போற்றி
385. ஓம் காம்பன தோளியம்மையே போற்றி
386. ஓம் காயத்திரியே போற்றி
387. ஓம் காரண காரிய வித்தே போற்றி
388. ஓம் காரண காரியம் கடந்தவளே போற்றி
389. ஓம் காரண காரியம் வகுத்தவளே போற்றி
390. ஓம் காரணியே போற்றி
391. ஓம் காரோணத்து அம்பிகையே போற்றி
392. ஓம் கால நாயகியே போற்றி
393. ஓம் காலத்தின் தலைவியே போற்றி
394. ஓம் காலத்தை வகுத்தவளே போற்றி
395. ஓம் காலத்தை வென்றவளே போற்றி
396. ஓம் காலமே போற்றி
397. ஓம் காலாந்தகியே போற்றி
398. ஓம் காவதேசுவரியே போற்றி
399. ஓம் காவியங் கண்ணியம்மையே போற்றி
400. ஓம் காவியச் சுவையே போற்றி
401. ஓம் காவியமே போற்றி
402. ஓம் காளகந்திரியே போற்றி
403. ஓம் காளத்தி நாயகியே போற்றி
404. ஓம் காற்றே போற்றி
405. ஓம் கானார் குழலியம்மையே போற்றி
406. ஓம் கிரிகுசாம்பிகையே போற்றி
407. ஓம் கிளியாடும் தோளுடையவளே போற்றி
408. ஓம் கீழ்வேளூர் ஆளும் அம்மையே போற்றி
409. ஓம் குங்கும வல்லியே போற்றி
410. ஓம் குடந்தைக்கு அரசியே போற்றி
411. ஓம் குடிலையே போற்றி
412. ஓம் குடோரியே போற்றி
413. ஓம் குணக்குன்றே போற்றி
414. ஓம் குணமே போற்றி
415. ஓம் குண்டலக் காதுடையாளே போற்றி
416. ஓம் குண்டலியே போற்றி
417. ஓம் குந்தமேந்தியே போற்றி
418. ஓம் குந்தள நாயகியே போற்றி
419. ஓம் குமரன் அம்மையே போற்றி
420. ஓம் குமரியே போற்றி
421. ஓம் குயிலினு நன்மொழியம்மையே போற்றி
422. ஓம் குருத்து வாள் கொண்டவளே போற்றி
423. ஓம் குரோதம் ஒழிப்பவளே போற்றி
424. ஓம் குலம் காப்பவளே போற்றி
425. ஓம் குவளைத் திருவாயே போற்றி
426. ஓம் குவித்த கரத்துள் வளரும் கருத்தே போற்றி
427. ஓம் குழவியாம் எமைக் காப்பவளே போற்றி
428. ஓம் குறளை களைபவளே போற்றி
429. ஓம் குறிகுணம் கடந்தவளே போற்றி
430. ஓம் குறியற்ற இடமே போற்றி
431. ஓம் குறுக்கை வாகனத்தாளே போற்றி
432. ஓம் குறைகள் களைபவளே போற்றி
433. ஓம் குறைவிலா நிறையே போற்றி
434. ஓம் குற்றமில் குணத்தாளே போற்றி
435. ஓம் குற்றம் பொறுக்கும் கோதையே போற்றி
436. ஓம் குன்றலில் மோகினியே போற்றி
437. ஓம் கூத்தின் தலைவியே போற்றி
438. ஓம் கூறிலாப் பொருளே போற்றி
439. ஓம் கூற்றமே போற்றி
440. ஓம் கூற்றுக்குக் கூற்றானவளே போற்றி
441. ஓம் கேசரியாளே போற்றி
442. ஓம் கேடிலியப்பன் நாயகியே போற்றி
443. ஓம் கேடுகள் களைபவளே போற்றி
444. ஓம் கேதாரநாதன் மணாட்டியே போற்றி
445. ஓம் கொடுமுடி வாழ் அம்பிகையே போற்றி
446. ஓம் கொடுமை அழிப்பவளே போற்றி
447. ஓம் கொடையுள்ளம் கொண்டவளே போற்றி
448. ஓம் கொற்றவையே போற்றி
449. ஓம் கோகிலேசுவரியே போற்றி
450. ஓம் கோடரிக் கரத்தாளே போற்றி
451. ஓம் கோடிக்கா வாழ் குழலியே போற்றி
452. ஓம் கோடிநாதன் நாயகியே போற்றி
453. ஓம் கோடியாம் அந்தமே போற்றி
454. ஓம் கோடைக் கனலே போற்றி
455. ஓம் கோட்டை மாரியே போற்றி
456. ஓம் கோணப்பிரான் கோதையே போற்றி
457. ஓம் கோதிலா அமுதே போற்றி
458. ஓம் கோதிலாத் தவமே போற்றி
459. ஓம் கோமகளே போற்றி
460. ஓம் கோல்வளை நாயகியே போற்றி
461. ஓம் கோழம்பத்து வாழ் கூத்தாம்பிகையே போற்றி
462. ஓம் கோளரவே போற்றி
463. ஓம் கௌமாரியே போற்றி
464. ஓம் கௌரியே போற்றி
465. ஓம் சக்கரம் ஏந்தியவளே போற்றி
466. ஓம் சக்தியே போற்றி
467. ஓம் சங்கரியே போற்றி
468. ஓம் சங்கு ஏந்தியவளே போற்றி
469. ஓம் சங்கொலியே போற்றி
470. ஓம் சசிகண்டன் நாயகியே போற்றி
471. ஓம் சடாமகுடன் மணாட்டியே போற்றி
472. ஓம் சடைச்சியே போற்றி
473. ஓம் சட்டைநாதன் நாயகியே போற்றி
474. ஓம் சண்டிகையே போற்றி
475. ஓம் சண்பக வனக் குயிலே போற்றி
476. ஓம் சத்தானவளே போற்றி
477. ஓம் சத்திய வடிவே போற்றி
478. ஓம் சத்தியம் காத்தருள்பவளே போற்றி
479. ஓம் சத்தியவாகீசன் சத்தியே போற்றி
480. ஓம் சந்தன மாரியே போற்றி
481. ஓம் சமயபுரத்தாளே போற்றி
482. ஓம் சமரியே போற்றி
483. ஓம் சம்புநாதன் மணாட்டியே போற்றி
484. ஓம் சர்வாங்க நாயகியே போற்றி
485. ஓம் சற்குண வல்லியே போற்றி
486. ஓம் சாதகையே போற்றி
487. ஓம் சாதனை செய்வோருக்கு அருள்பவளே போற்றி
488. ஓம் சாத்தவியே போற்றி
489. ஓம் சாந்த நாயகியே போற்றி
490. ஓம் சாம கண்டன் நாயகியே போற்றி
491. ஓம் சாமுண்டியே போற்றி
492. ஓம் சாம்பவியே போற்றி
493. ஓம் சாயா தேவியே போற்றி
494. ஓம் சிகண்டியே போற்றி
495. ஓம் சிக்கல் தீர்ப்பவளே போற்றி
496. ஓம் சிங்கார வல்லியே போற்றி
497. ஓம் சித்தத்துள் தித்திக்கும் தேனே போற்றி
498. ஓம் சித்தத்துள் நடனம் ஆடுபவளே போற்றி
499. ஓம் சித்தமே போற்றி
500. ஓம் சித்தி தருபவளே போற்றி
501. ஓம் சித்தியின் உத்தியே போற்றி
502. ஓம் சித்தியே போற்றி
503. ஓம் சித்துக்கள் செய்பவளே போற்றி
504. ஓம் சிந்ததையைச் சிவமாக்குபவளே போற்றி
505. ஓம் சிந்தனைக்கு அரியவளே போற்றி
506. ஓம் சிந்துரப் பரிபுரையே போற்றி
507. ஓம் சிந்தை ஒழித்துணையே போற்றி
508. ஓம் சிந்தை தெளிய வைப்பவளே போற்றி
509. ஓம் சிந்தையில் நின்ற சிவாம்பிகையே போற்றி
510. ஓம் சிந்தையுள் தெளிவே போற்றி
511. ஓம் சிம்ம வாகனத்தாளே போற்றி
512. ஓம் சிலம்பு அணிந்தவளே போற்றி
513. ஓம் சிவகதி தருபவளே போற்றி
514. ஓம் சிவகாமியே போற்றி
515. ஓம் சிவசக்தியே போற்றி
516. ஓம் சிவநெறி நடத்துபவளே போற்றி
517. ஓம் சிவயோக நாயகியே போற்றி
518. ஓம் சிவலோக வல்லியே போற்றி
519. ஓம் சிவவல்லபையே போற்றி
520. ஓம் சிவானந்த வல்லியே போற்றி
521. ஓம் சிவையே போற்றி
522. ஓம் சிறப்பே போற்றி
523. ஓம் சிறுமை ஒழிப்பவளே போற்றி
524. ஓம் சிற்சத்தியே போற்றி
525. ஓம் சிற்பரையே போற்றி
526. ஓம் சிற்றம்பலவாணி போற்றி
527. ஓம் சிற்றிடை நாயகியே போற்றி
528. ஓம் சினம் அறுப்பவளே போற்றி
529. ஓம் சீரெழுத்தானவளே போற்றி
530. ஓம் சீர் தருபவளே போற்றி
531. ஓம் சீர்மல்கு பாடலுகந்தவளே போற்றி
532. ஓம் சீலமே போற்றி
533. ஓம் சீவ சக்தியே போற்றி
534. ஓம் சுடர் நயனச் சோதியே போற்றி
535. ஓம் சுடர்க்கொழுந்தீசுவரியே போற்றி
536. ஓம் சுடலையாடி மணாட்டியே போற்றி
537. ஓம் சுந்தர விடங்கன் நாயகியே போற்றி
538. ஓம் சுந்தராம்பிகையே போற்றி
539. ஓம் சுந்தரியே போற்றி
540. ஓம் சுருதி நாயகியே போற்றி
541. ஓம் சுருதி முடிந்த இடமே போற்றி
542. ஓம் சுருதிக்கண் தூக்கமே போற்றி
543. ஓம் சுழல் கண்ணாளே போற்றி
544. ஓம் சுற்றம் காப்பவளே போற்றி
545. ஓம் சூது ஒழிப்பவளே போற்றி
546. ஓம் சூரியே போற்றி
547. ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி
548. ஓம் சூலியே போற்றி
549. ஓம் சூலை தீர்ப்பவளே போற்றி
550. ஓம் செகமாயையே போற்றி
551. ஓம் செங்கண்ணன் நாயகியே போற்றி
552. ஓம் செஞ்சடையோன் மணாட்டியே போற்றி
553. ஓம் செந்தாளே போற்றி
554. ஓம் செம்மலர் அணிந்தவளே போற்றி
555. ஓம் செய்வினை அழிப்பவளே போற்றி
556. ஓம் செருக்கு அறுப்பவளே போற்றி
557. ஓம் செல்வநாயகியே போற்றி
558. ஓம் செல்வம் தருபவளே போற்றி
559. ஓம் செவ்விய ஞானம் தருபவளே போற்றி
560. ஓம் செழுஞ்சுடரே போற்றி
561. ஓம் செறிகின்ற ஞானமே போற்றி
562. ஓம் செறிவே போற்றி
563. ஓம் செறுபகை வெல்பவளே போற்றி
564. ஓம் சேய் பிழை பொறுப்பவளே போற்றி
565. ஓம் சேவடி சிந்தையில் வைத்தவளே போற்றி
566. ஓம் சொக்கியே போற்றி
567. ஓம் சொர்ணபுரி நாயகியே போற்றி
568. ஓம் சோகம் அழிப்பவளே போற்றி
569. ஓம் சோதி மின்னம்மையே போற்றி
570. ஓம் சோதிக்கும் சோதியே போற்றி
571. ஓம் சோதியுள் சுடரே போற்றி
572. ஓம் சோம கலாநாயகியே போற்றி
573. ஓம் சோமேசுவரியே போற்றி
574. ஓம் சோம்பல் நீக்குபவளே போற்றி
575. ஓம் சோர்வு அகற்றுபவளே போற்றி
576. ஓம் சௌந்தர வல்லியே போற்றி
577. ஓம் ஞாலத்து அரசியே போற்றி
578. ஓம் ஞான முத்திரையே போற்றி
579. ஓம் ஞான வல்லியம்மையே போற்றி
580. ஓம் ஞானக் கண்ணே போற்றி
581. ஓம் ஞானக் கனலே போற்றி
582. ஓம் ஞானத்தின் ஒண்சுடரே போற்றி
583. ஓம் ஞானத்தை நாவில் வைப்பவளே போற்றி
584. ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி
585. ஓம் ஞானப் பெருங் கடலே போற்றி
586. ஓம் ஞானம் தருபவளே போற்றி
587. ஓம் ஞானாம்பிகையே போற்றி
588. ஓம் தக்கன் மகளே போற்றி
589. ஓம் தடுத்தாட்கொண்டவளே போற்றி
590. ஓம் தண்டினியே போற்றி
591. ஓம் தத்துவ உரையே போற்றி
592. ஓம் தத்துவ ஞானமே போற்றி
593. ஓம் தத்துவமே போற்றி
594. ஓம் தத்துவம் கடந்த தனிப்பொருளே போற்றி
595. ஓம் தந்திரமே போற்றி
596. ஓம் தரணி காப்பவளே போற்றி
597. ஓம் தராசத்தியே போற்றி
598. ஓம் தருமத்தின் செல்வியே போற்றி
599. ஓம் தருமபுரி ஈசுவரியே போற்றி
600. ஓம் தருமமே போற்றி
601. ஓம் தர்ப்பாரணியேசுவரியே போற்றி
602. ஓம் தலைவியே போற்றி
603. ஓம் தவ நெறி தருபவளே போற்றி
604. ஓம் தவ நெறியே போற்றி
605. ஓம் தவசியே போற்றி
606. ஓம் தவப் பயனே போற்றி
607. ஓம் தவமே போற்றி
608. ஓம் தவளவெண்ணகை அம்மையே போற்றி
609. ஓம் தழலே போற்றி
610. ஓம் தளரா மனம் தருபவளே போற்றி
611. ஓம் தற்பரையே போற்றி
612. ஓம் தனக்குவமை இல்லாளே போற்றி
613. ஓம் தனமும் கல்வியும் தருபவளே போற்றி
614. ஓம் தனியெழுத்தே போற்றி
615. ஓம் தன்விதி மீறாத் தலைவியே போற்றி
616. ஓம் தன்னை வெல்லும் திறனளிப்பவளே போற்றி
617. ஓம் தன்னையறிய வழிகாட்டுபவளே போற்றி
618. ஓம் தாங்கொணா வறுமை அகற்றுபவளே போற்றி
619. ஓம் தாண்டவத்தின் இலக்கணமே போற்றி
620. ஓம் தாண்டவியே போற்றி
621. ஓம் தாயினும் சிறந்தவளே போற்றி
622. ஓம் தாயே போற்றி
623. ஓம் தார்மாலை அணிந்தவளே போற்றி
624. ஓம் தாழ்சடையோன் நாயகியே போற்றி
625. ஓம் தாழ்வு வராது காப்பவளே போற்றி
626. ஓம் தானமே போற்றி
627. ஓம் தானே அனைத்தும் ஆனவளே போற்றி
628. ஓம் தான்தோன்றியே போற்றி
629. ஓம் திகம்பரியே போற்றி
630. ஓம் திகழ்பதி எங்கும் உள்ளவளே போற்றி
631. ஓம் திசைமுகியே போற்றி
632. ஓம் திரிபுர சுந்தரியே போற்றி
633. ஓம் திருக்குழல் நாயகியம்மையே போற்றி
634. ஓம் திருநிலை நாயகியே போற்றி
635. ஓம் திருப்பயற்று ஈசுவரியே போற்றி
636. ஓம் திருமடந்தை அம்மையே போற்றி
637. ஓம் திருமுண்டீச்சுவரியே போற்றி
638. ஓம் திருவடிப் பேறு அருள்பவளே போற்றி
639. ஓம் திருவே உருவே போற்றி
640. ஓம் தில்லைக் காளியே போற்றி
641. ஓம் தீமையும் பாவமும் களைபவளே போற்றி
642. ஓம் தீயிடை ஒளியே போற்றி
643. ஓம் தீயிடை வெம்மையே போற்றி
644. ஓம் தீரா வினை தீர்ப்பவளே போற்றி
645. ஓம் துணைமாலை நாயகியே போற்றி
646. ஓம் துணைவியே போற்றி
647. ஓம் துதிப்போர்க்கு அருள்பவளே போற்றி
648. ஓம் துயர் எல்லாம் துடைப்பவளே போற்றி
649. ஓம் தூண்டா மணி விளக்கே போற்றி
650. ஓம் தூய நெறியே போற்றி
651. ஓம் தூயவளே போற்றி
652. ஓம் தூய்மையும் அறிவும் தருபவளே போற்றி
653. ஓம் தெய்வமே போற்றி
654. ஓம் தெளிவினில் சீலமே போற்றி
655. ஓம் தெளிவே போற்றி
656. ஓம் தென்பாண்டி நாட்டாளே போற்றி
657. ஓம் தேவியே போற்றி
658. ஓம் தேனார் அமுதே போற்றி
659. ஓம் தேன்மொழியாளே போற்றி
660. ஓம் தையல்நாயகியே போற்றி
661. ஓம் தொலையாச் செல்வம் தருபவளே போற்றி
662. ஓம் தொல்லை போக்குபவளே போற்றி
663. ஓம் தொழுதகை துன்பம் துடைப்பவளே போற்றி
664. ஓம் தோகையாம்பிகையே போற்றி
665. ஓம் தோணியப்பன் நாயகியே போற்றி
666. ஓம் தோணியே போற்றி
667. ஓம் தோன்றாத் துணையே போற்றி
668. ஓம் நக்கன் நாயகியே போற்றி
669. ஓம் நம்பன் நாயகியே போற்றி
670. ஓம் நலமெலாம் நல்குபவளே போற்றி
671. ஓம் நலிந்தோர்க்கு அருள்பவளே போற்றி
672. ஓம் நல் அரவே போற்றி
673. ஓம் நல்லநாயகியே போற்றி
674. ஓம் நல்லன தருபவளே போற்றி
675. ஓம் நல்லூர்வாழ் நங்கையே போற்றி
676. ஓம் நறுங்குழல் நாயகியே போற்றி
677. ஓம் நறுமலர் அடியாளே போற்றி
678. ஓம் நற்கதி தருபவளே போற்றி
679. ஓம் நற்கனிச் சுவையே போற்றி
680. ஓம் நாகக் குடையாளே போற்றி
681. ஓம் நாகமே போற்றி
682. ஓம் நாகேசுவரத்தில் உள்ளவளே போற்றி
683. ஓம் நாத ஞானம் அருள்பவளே போற்றி
684. ஓம் நாத விந்துவே போற்றி
685. ஓம் நாதமே போற்றி
686. ஓம் நாயகியே போற்றி
687. ஓம் நாரணியே போற்றி
688. ஓம் நாரியே போற்றி
689. ஓம் நாவில் சுவையே போற்றி
690. ஓம் நாவில் நடமிடுபவளே போற்றி
691. ஓம் நிதி தந்து அருள்பவளே போற்றி
692. ஓம் நித்திய கல்யாணியே போற்றி
693. ஓம் நித்தியப் பொருளே போற்றி
694. ஓம் நித்திரை நீக்குபவளே போற்றி
695. ஓம் நிமலையே போற்றி
696. ஓம் நிம்மதி தந்து அருள்பவளே போற்றி
697. ஓம் நிரஞ்சனியே போற்றி
698. ஓம் நிரந்தரியே போற்றி
699. ஓம் நிருத்தன் நாயகியே போற்றி
700. ஓம் நிறைவே போற்றி
701. ஓம் நினைவே போற்றி
702. ஓம் நீதியே போற்றி
703. ஓம் நீலகண்டன் நாயகியே போற்றி
704. ஓம் நீலாங்கமேனியாளே போற்றி
705. ஓம் நீலாம்பிகையே போற்றி
706. ஓம் நீலியே போற்றி
707. ஓம் நீள் உலகு எங்கும் நிறைந்தவளே போற்றி
708. ஓம் நுண்ணுணர்வே போற்றி
709. ஓம் நுண்பொருளே போற்றி
710. ஓம் நுதனாட்டியே போற்றி
711. ஓம் நெறிகாட்டும் நாயகியே போற்றி
712. ஓம் நெறியே போற்றி
713. ஓம் நெற்றிக் கண்ணன் நாயகியே போற்றி
714. ஓம் நோக்கரிய நோக்கே போற்றி
715. ஓம் பகவதியே போற்றி
716. ஓம் பகுந்துண்பாளே போற்றி
717. ஓம் பகை போக்குபவளே போற்றி
718. ஓம் பசுபதி மணாட்டியே போற்றி
719. ஓம் பசும்பொன் மயிலாம்பாளே போற்றி
720. ஓம் பஞ்சின் மெல்லடியாளே போற்றி
721. ஓம் படவெட்டி மாரியே போற்றி
722. ஓம் பட்டாடை உடுத்துபவளே போற்றி
723. ஓம் பட்டீசுரத்து பாவையே போற்றி
724. ஓம் பணிந்தவர் பாவங்கள் தீர்ப்பவளே போற்றி
725. ஓம் பணிந்தோர்க்கு அருள்பவளே போற்றி
726. ஓம் பண்ணாரி அம்மையே போற்றி
727. ஓம் பண்ணுறு கேள்வியே போற்றி
728. ஓம் பண்மொழியம்மையே போற்றி
729. ஓம் பத்திரகாளியே போற்றி
730. ஓம் பந்த பாசம் அறுப்பவளே போற்றி
731. ஓம் பந்தாடு நாயகியே போற்றி
732. ஓம் பம்பை உடுக்கை கொண்டவளே போற்றி
733. ஓம் பயங்கரியே போற்றி
734. ஓம் பரகதி தருபவளே போற்றி
735. ஓம் பரங்கருணை நாயகியே போற்றி
736. ஓம் பரம சுந்தரியே போற்றி
737. ஓம் பரமயோகியே போற்றி
738. ஓம் பராசக்தியே போற்றி
739. ஓம் பராயத்துறை நாயகியே போற்றி
740. ஓம் பரிபுரையே போற்றி
741. ஓம் பரையே போற்றி
742. ஓம் பல்கோடி குணமுள்ளவளே போற்றி
743. ஓம் பல்லூழி படைத்தவளே போற்றி
744. ஓம் பவளக்கொடி அம்மையே போற்றி
745. ஓம் பவானியே போற்றி
746. ஓம் பழமலைப் பிராட்டியே போற்றி
747. ஓம் பழம்பதிப் பாவையே போற்றி
748. ஓம் பழனத்து அம்மையே போற்றி
749. ஓம் பழி தீர்ப்பவளே போற்றி
750. ஓம் பழியிலாதவளே போற்றி
751. ஓம் பழையாற்றுப் பதுமையே போற்றி
752. ஓம் பற்றிய வினைகள் போக்குபவளே போற்றி
753. ஓம் பற்றிலா நெஞ்சம் அருள்பவளே போற்றி
754. ஓம் பனசையே போற்றி
755. ஓம் பாசம் உடையவளே போற்றி
756. ஓம் பாடலையே போற்றி
757. ஓம் பார் முழுதும் ஆகினவளே போற்றி
758. ஓம் பார்வதி அம்மையே போற்றி
759. ஓம் பாலாம்பிகையே போற்றி
760. ஓம் பாலின் நன்மொழியாளே போற்றி
761. ஓம் பாலின் நெய்யே போற்றி
762. ஓம் பாலைக் கிழத்தியே போற்றி
763. ஓம் பாவம் தீர்ப்பவளே போற்றி
764. ஓம் பிங்கலையே போற்றி
765. ஓம் பிஞ்ஞகன் பிராட்டியே போற்றி
766. ஓம் பிணி தீர்ப்பவளே போற்றி
767. ஓம் பிணிதீர்க்கும் மருந்தே போற்றி
768. ஓம் பிணியிலா வழ்வு தருபவளேபோற்றி
769. ஓம் பித்தன் மணாட்டியே போற்றி
770. ஓம் பிரகேசுவரியே போற்றி
771. ஓம் பிரமபுரியாளே போற்றி
772. ஓம் பிராட்டியே போற்றி
773. ஓம் பிரியா ஈசுவரியே போற்றி
774. ஓம் பிருகந்நாயகியே போற்றி
775. ஓம் பிழைசெய்யா நெஞ்சம் தருபவளே போற்றி
776. ஓம் பிறப்பு இறப்பு அறுப்பவளே போற்றி
777. ஓம் பிறப்பு இறப்பு இல்லாதவளே போற்றி
778. ஓம் புகலிடம் நீயே போற்றி
779. ஓம் புங்கவியே போற்றி
780. ஓம் புண்ணியம் தருபவளே போற்றி
781. ஓம் புத்தியே போற்றி
782. ஓம் புத்தீயின் அரவே போற்றி
783. ஓம் புந்தியுள் புகுந்தவளே போற்றி
784. ஓம் புராசத்தியே போற்றி
785. ஓம் புராண சிந்தாமணியே போற்றி
786. ஓம் புராதனியே போற்றி
787. ஓம் புராந்தகியே போற்றி
788. ஓம் புரிகுழலாம்பிகையே போற்றி
789. ஓம் புலன் ஒடுக்க அருள்பவளே போற்றி
790. ஓம் புலி ஆசனத்தாளே போற்றி
791. ஓம் புவன நாயகியே போற்றி
792. ஓம் புவனிவிடங்கியே போற்றி
793. ஓம் புற்றிடங் கொண்டவளே போற்றி
794. ஓம் புனிதவதியே போற்றி
795. ஓம் பூங்கொடி நாயகியே போற்றி
796. ஓம் பூங்கோதையே போற்றி
797. ஓம் பூதநாயகியே போற்றி
798. ஓம் பூந்துருத்திப் பூவையே போற்றி
799. ஓம் பூரணமே போற்றி
800. ஓம் பூவனூர்ப் புனிதவல்லியே போற்றி
801. ஓம் பூவினையாளருக்குப் பூவே போற்றி
802. ஓம் பூவே போற்றி
803. ஓம் பெண்ணின்நல்லாளே போற்றி
804. ஓம் பெரியநாயகியே போற்றி
805. ஓம் பெரியவளே போற்றி
806. ஓம் பெருங்கருணை நாயகியே போற்றி
807. ஓம் பெருநெறி உய்க்கும் பேரரசியே போற்றி
808. ஓம் பெருநெறியே போற்றி
809. ஓம் பெரும்பற்றப் புலியூராளே போற்றி
810. ஓம் பெருவெளியே போற்றி
811. ஓம் பேரண்டமே போற்றி
812. ஓம் பேரருளே போற்றி
813. ஓம் பேராற்றலே போற்றி
814. ஓம் பைரவியே போற்றி
815. ஓம் பொறுமைக் கடலே போற்றி
816. ஓம் போதமே போற்றி
817. ஓம் போரூர் நாயகியே போற்றி
818. ஓம் மகதியே போற்றி
819. ஓம் மகத்தில் உதித்தவளே போற்றி
820. ஓம் மகமாயியே போற்றி
821. ஓம் மகாமாயையே போற்றி
822. ஓம் மகாலக்குமியே போற்றி
823. ஓம் மங்கல நாயகியே போற்றி
824. ஓம் மங்களாம்பிகையே போற்றி
825. ஓம் மங்கை நாயகியே போற்றி
826. ஓம் மங்கையர்க்கரசியே போற்றி
827. ஓம் மடங்கல் ஆசனத்தாளே போற்றி
828. ஓம் மட்டுவார் குழலம்மையே போற்றி
829. ஓம் மணியின் ஒளியே போற்றி
830. ஓம் மணியே போற்றி
831. ஓம் மண்டல ஈசுவரியே போற்றி
832. ஓம் மண்துலங்க ஆடி மகிழ்ந்தவளேபோற்றி
833. ஓம் மதங்கியே போற்றி
834. ஓம் மதம் நீக்கி அருள்பவளே போற்றி
835. ஓம் மதிக்கு விருந்தே போற்றி
836. ஓம் மதிநலம் தருபவளே போற்றி
837. ஓம் மதியே போற்றி
838. ஓம் மதுபதியே போற்றி
839. ஓம் மதுர காளியே போற்றி
840. ஓம் மந்திரமும் தந்திரமும் ஆன மலரடியாளே போற்றி
841. ஓம் மந்திரம் உரைக்கும் பொருளே போற்றி
842. ஓம் மயக்கம் தீர்ப்பவளே போற்றி
843. ஓம் மயேசுவரியே போற்றி
844. ஓம் மரகத வல்லியே போற்றி
845. ஓம் மருத்துண்ணியே போற்றி
846. ஓம் மருவார் குழலியம்மையே போற்றி
847. ஓம் மருள் நீக்குபவளே போற்றி
848. ஓம் மலர்குழல் நாயகியே போற்றி
849. ஓம் மலர்மங்கை நாயகியே போற்றி
850. ஓம் மலைமகளே போற்றி
851. ஓம் மறவா நினைவைத் தருபவளே போற்றி
852. ஓம் மறைக்காட்டுறை மாதே போற்றி
853. ஓம் மறைப் பொருளே போற்றி
854. ஓம் மறைப்பே போற்றி
855. ஓம் மறையாப் பொருளே போற்றி
856. ஓம் மறையின் வேரே போற்றி
857. ஓம் மறையே போற்றி
858. ஓம் மன நலம் அருள்பவளே போற்றி
859. ஓம் மனக் குகை உறைபவளே போற்றி
860. ஓம் மனத்திற்கு விருந்தானவளே போற்றி
861. ஓம் மனத்துணை நாயகியே போற்றி
862. ஓம் மனமணி விளக்கே போற்றி
863. ஓம் மனமருட்சி நீக்குபவளே போற்றி
864. ஓம் மனமே போற்றி
865. ஓம் மனோன்மணியே போற்றி
866. ஓம் மாசில்லாத் தாயே போற்றி
867. ஓம் மாணிக்க வல்லியே போற்றி
868. ஓம் மாணிக்கமே போற்றி
869. ஓம் மாண்புடைய நெறிதருபவளே போற்றி
870. ஓம் மாதங்கியே போற்றி
871. ஓம் மாதரியே போற்றி
872. ஓம் மாதவன் தங்கையே போற்றி
873. ஓம் மாதுமை அம்மையே போற்றி
874. ஓம் மாதேவியே போற்றி
875. ஓம் மாமணிச் சோதியே போற்றி
876. ஓம் மாமருந்தே போற்றி
877. ஓம் மாயாவதியே போற்றி
878. ஓம் மாயூரவாணியே போற்றி
879. ஓம் மாயையே போற்றி
880. ஓம் மாலினியே போற்றி
881. ஓம் மாவினையாளருக்கு முத்தியே போற்றி
882. ஓம் மாழையங் கண்ணியே போற்றி
883. ஓம் மானே போற்றி
884. ஓம் மின்னனையாளம்மையே போற்றி
885. ஓம் மீனாட்சியே போற்றி
886. ஓம் முக்கண்ணியே போற்றி
887. ஓம் முதலாகி நடுவாகி முடிவானவளே போற்றி
888. ஓம் முதல்வியே போற்றி
889. ஓம் முதுகுன்றம் அமர்ந்தவளே போற்றி
890. ஓம் முத்தாம்பிகையே போற்றி
891. ஓம் முத்தி தருபவளே போற்றி
892. ஓம் முத்தியே போற்றி
893. ஓம் முத்து மாரியே போற்றி
894. ஓம் மும்மலம் அறுப்பவளே போற்றி
895. ஓம் முருவல் பூத்த முகத்தழகியே போற்றி
896. ஓம் முல்லைவன நாயகியே போற்றி
897. ஓம் முழுமுதற் சோதியே போற்றி
898. ஓம் முளையே போற்றி
899. ஓம் முன்னவளே போற்றி
900. ஓம் மூகாம்பிகையே போற்றி
901. ஓம் மூர்க்கையே போற்றி
902. ஓம் மூலத்தின் மோனமே போற்றி
903. ஓம் மூலமே போற்றி
904. ஓம் மூவிலை வேல்கொண்டவளே போற்றி
905. ஓம் மேக நாயகியே போற்றி
906. ஓம் மேகலாம்பிகையே போற்றி
907. ஓம் மேன்மை தருபவளே போற்றி
908. ஓம் மைமேவு கண்ணியே போற்றி
909. ஓம் மோகம் தீர்ப்பவளே போற்றி
910. ஓம் மோகினியே போற்றி
911. ஓம் மோனத்தே ஒளி காட்டுபவளே போற்றி
912. ஓம் மோனமே போற்றி
913. ஓம் யாக்கை துறக்க அருளுவோளே போற்றி
914. ஓம் யாமளையே போற்றி
915. ஓம் யாழின் மென்மொழியம்மையே போற்றி
916. ஓம் யோக நாயகியே போற்றி
917. ஓம் யோகினியே போற்றி
918. ஓம் வச்சிரத்தம்ப நாயகியே போற்றி
919. ஓம் வஞ்சம் நீக்குபவளே போற்றி
920. ஓம் வஞ்சவமே போற்றி
921. ஓம் வஞ்சனியே போற்றி
922. ஓம் வஞ்சியே போற்றி
923. ஓம் வடதளிச் செல்வியே போற்றி
924. ஓம் வடிவுடை அம்மையே போற்றி
925. ஓம் வடுகன் தாயே போற்றி
926. ஓம் வடுகியே போற்றி
927. ஓம் வடுவகிர்க் கண்ணம்மையே போற்றி
928. ஓம் வண்டமர் பூங்குழலியே போற்றி
929. ஓம் வயப்புலி ஆசனத்தாளே போற்றி
930. ஓம் வயிரவியே போற்றி
931. ஓம் வரதையே போற்றி
932. ஓம் வரம் அளிப்பவளே போற்றி
933. ஓம் வரலக்குமியே போற்றி
934. ஓம் வராலிகையே போற்றி
935. ஓம் வராளமே போற்றி
936. ஓம் வலவையே போற்றி
937. ஓம் வல்லணங்கே போற்றி
938. ஓம் வல்லபியே போற்றி
939. ஓம் வல்வினை தீர்ப்பவளே போற்றி
940. ஓம் வழித்துணையே போற்றி
941. ஓம் வளமெலாம் தருபவளே போற்றி
942. ஓம் வளர்தலும் தேய்தலும் இல்லாதவளே போற்றி
943. ஓம் வளியே போற்றி
944. ஓம் வள்ளலே போற்றி
945. ஓம் வறுமை ஒழிப்பவளே போற்றி
946. ஓம் வனப்பே போற்றி
947. ஓம் வனமாலினியே போற்றி
948. ஓம் வனமுலைநாயகி அம்மையே போற்றி
949. ஓம் வாக்கால் மறைவிரித்தவளே போற்றி
950. ஓம் வாக்கில் துலங்குபவளே போற்றி
951. ஓம் வாசியே போற்றி
952. ஓம் வாடா மலர்மங்கையே போற்றி
953. ஓம் வாணெடுங்கண்ணியம்மையே போற்றி
954. ஓம் வாமதேவியே போற்றி
955. ஓம் வாய்மூர் நாயகியே போற்றி
956. ஓம் வாரணியே போற்றி
957. ஓம் வார்வினை தீர்ப்பவளே போற்றி
958. ஓம் வாலையே போற்றி
959. ஓம் வாழவந்த நாயகியே போற்றி
960. ஓம் வாளேந்தியே போற்றி
961. ஓம் வானவர் தாயே போற்றி
962. ஓம் வானில் எழுத்தே போற்றி
963. ஓம் வானில் ஒலியே போற்றி
964. ஓம் விகிர்தேசுவரியே போற்றி
965. ஓம் விசயவல்லியே போற்றி
966. ஓம் விசாலாட்சியே போற்றி
967. ஓம் விசுத்தியின் நாயகியே போற்றி
968. ஓம் விடமியே போற்றி
969. ஓம் விடாமுயற்சி தருபவளே போற்றி
970. ஓம் விடியா விளக்கே போற்றி
971. ஓம் விடையுடையாளே போற்றி
972. ஓம் விண்ணரசியே போற்றி
973. ஓம் வித்தே போற்றி
974. ஓம் விந்தே போற்றி
975. ஓம் விந்தையே போற்றி
976. ஓம் விமலனின் நாயகியே போற்றி
977. ஓம் விமலையே போற்றி
978. ஓம் விரிசடையாளே போற்றி
979. ஓம் விருத்தாம்பிகையே போற்றி
980. ஓம் வில்லம்பு ஏந்தியவளே போற்றி
981. ஓம் வினை அழிப்பவளே போற்றி
982. ஓம் வீடுபேறின் எல்லையே போற்றி
983. ஓம் வீதிவிடங்கியே போற்றி
984. ஓம் வீர சக்தியே போற்றி
985. ஓம் வீர மாகாளியே போற்றி
986. ஓம் வீர லக்குமியே போற்றி
987. ஓம் வீரச் செல்வியே போற்றி
988. ஓம் வீரட்டேசுவரியே போற்றி
989. ஓம் வீரியே போற்றி
990. ஓம் வெகுளி அறுப்பவளே போற்றி
991. ஓம் வெங்கதிர் நாயகியே போற்றி
992. ஓம் வெஞ்சினம் நீக்குபவளே போற்றி
993. ஓம் வெம்பவம் நீக்குபவளே போற்றி
994. ஓம் வெம்மை தவிர்ப்பவளே போற்றி
995. ஓம் வெற்றி தருபவளே போற்றி
996. ஓம் வேத நாயகியே போற்றி
997. ஓம் வேத முடிவே போற்றி
998. ஓம் வேத வல்லியே போற்றி
999. ஓம் வேதபுரி ஈசுவரியே போற்றி
1000. ஓம் வேதமே போற்றி
1001. ஓம் வேதனை தீர்ப்பவளே போற்றி
1002. ஓம் வேதாளியே போற்றி
1003. ஓம் வேம்பே போற்றி
1004. ஓம் வேயுறுதோளி அம்மையே போற்றி
1005. ஓம் வேலனின் தாயே போற்றி
1006. ஓம் வேள்வியின் பயனே போற்றி
1007. ஓம் வேள்வியே போற்றி
1008. ஓம் வேற்கண்ணி நாயகியே போற்றி